எங்க வந்து யாருக்கிட்ட சீன் போடுற.. 14 பந்தில் 40 ரன்கள்.. ஆர்ச்சரை அடித்து நொறுக்கிய சஞ்சு சாம்சன்!
மும்பை: இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர் பவுலிங்கில் 14 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 4 சிக்ஸ், 3 பவுண்டரியை விளாசி அசத்தி இருக்கிறார். ஆர்ச்சரின் வேகத்தை சஞ்சு சாம்சனால் சமாளிக்க முடியுமா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த சூழலில், சஞ்சு சாம்சன் அவரை இடதுகையால் டீல் செய்திருப்பது வரவேற்பை பெற்று வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக சஞ்சு சாம்சன் மற்றும் ஆர்ச்சர் இடையிலான ரைவல்ரி பேசப்பட்டது. ஏனென்றால் கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு ஷார்ட் பால்களை வீசி அதிகமாக டார்ச்சர் செய்தது ஆர்ச்சர் தான்.

அதற்கு ஆர்ச்சரின் வீசும் கூடுதல் வேகமும் ஒரு காரணமாக அமைந்தது. சஞ்சு சாம்சனால் 145 கிமீ வேகத்திற்கு மேல் வீசப்படும் பந்துகளை சமாளிக்க முடியவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. அதற்கேற்ப டி20 கிரிக்கெட்டில் ஆர்ச்சருக்கு எதிராக 5 இன்னிங்ஸில் 23 பந்துகளை எதிர்கொண்டுள்ள சஞ்சு சாம்சன், 25 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். அதிலும் 3 முறை ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்திருக்கிறார்.
அதாவது ஆர்ச்சர் பவுலிங்கில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் சராசரி வெறும் 8.33 ரன்களாகவே இருந்தது. ஆனால் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் பழைய சீனெல்லாம் இங்கு இல்லை என்று நிரூபித்து காட்டி இருக்கிறார். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே 5 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன், ஒரு சிக்ஸ், பவுண்டரி உட்பட 13 ரன்களை குவித்தார்.
தொடர்ந்து ஆர்ச்சர் வீசிய 2வது ஓவரில் 6 பந்துகளையும் எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசி அசத்தினார். இதன்பின் சஞ்சு சாம்சனை யாராலும் நிறுத்த முடியவில்லை. 26 பந்துகளில் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து மிரட்டலான இன்னிங்ஸை ஆடிக் கொண்டிருந்தார். இதனால் சஞ்சுஇ சாம்சனை நிறுத்த மிடில் ஓவரில் ஆர்ச்சர் கொண்டு வரப்பட்டார்.
அந்த ஓவரில் 3 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 2 சிக்ஸ் உட்பட 13 ரன்களை விளாசினார். மொத்தமாக இந்தப் போட்டியில் ஆர்ச்சர் வீசிய 14 பந்துகளை எதிர்கொண்டுள்ள சஞ்சு சாம்சன் 4 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 40 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலமாக ஆர்ச்சர் பவுலிங்கை சஞ்சு சாம்சன் ஆதிக்கம் செய்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications