Sanju Samson: 148.2 கிமீ வேகம்.. இதுதான் கம்பேக்.. சஞ்சு சாம்சனை மிரட்டிவிட்ட கார்த்திக் தியாகி!
சென்னை: கேகேஆர் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி 148.2 கிமீ வேகத்தில் பந்துவீசி சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில சீசன்களாகவே கார்த்திக் தியாகி தடுமாறி வந்த சூழலில், இம்முறை கூடுதல் வேகத்துடன் பவுலிங் செய்து ஸ்விங் செய்வது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் - சஞ்சு சாம்சன் கூட்டணி அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் சிக்ஸ் அடிக்க முயற்சித்து 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ஆயுஷ் மாத்ரே பவுண்டரியும், சிக்சருமாய் விளாசி தள்ளினார். அதிலும் கேமரூன் க்ரீன் வீசிய ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்ஸ் உட்பட 20 ரன்களை விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபக்கம் சஞ்சு சாம்சன் தன் பங்கிற்கு அதிரடியாக ரன்களை குவித்தார்.
ஆனால் சுனில் நரைன் வீசிய ஒரு ஓவர் சிஎஸ்கே அணிக்கு ஒரே பிரேக்காக அமைந்தது. இதையடுத்து உடனடியாக இளம் வேகப்பந்துவீச்சாளரான கார்த்திக் தியாகி அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். 148 கிமீ வேகத்தில் சில பந்துகள் வீசப்பட்டதால், மைதானத்தில் இருந்த சில சிஎஸ்கே ரசிகர்களே மிரண்டுவிட்டனர். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உட்பட 8 ரன்கள் சேர்க்கப்பட்டாலும், 3 டாட் பால்களை கார்த்திக் தியாகி வீசினார்.
தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் சஞ்சு சாம்சனுக்கு அழுத்தம் எகிறியது. மீண்டும் கார்த்திக் தியாகி அட்டாக்கில் வந்து முதல் பந்தை ஷார்ட்டாக வீசினார். அதனை கணித்து சஞ்சு சாம்சன் சிக்ஸ் அடிக்க, அடுத்த பந்தை நேராக 148.2 கிமீ வேகத்தில் ஸ்டம்புக்கு வீசினார். அந்த சிக்ஸ்க்கு பின் சஞ்சு சாம்சன் அட்டாக் மோடில் இருந்தார்.
இதனால் உடனடியாக ஸ்டம்புக்கு வந்த பந்தை எதிர்கொள்ள டைமிங் கிடைக்கவில்லை. கூடுதல் வேகத்தில் வீசப்பட்டதால், சஞ்சு சாம்சனை கடந்து பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் சஞ்சு சாம்சன் 32 பந்துகளுக்கு 48 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் கார்த்திக் தியாகி 140 கிமீ வேகத்திலேயே பந்துகளை வீசியது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில சீசன்களாகவே கார்த்திக் தியாகி தடுமாறி வந்தார். சில நேரங்களில் பவுலிங் ஆக்ஷனையே மாற்றினார். இந்த முறை கார்த்திக் தியாகி கூடுதல் வேகத்தில் பந்துகளை வீசி வருவது அவருக்கு பாசிட்டிவாக அமைந்திருக்கிறது. இதனால் இந்த சீசன் கார்த்திக் தியாகி பிரேக் அவுட் சீசனாக அமையும் என்று கருதப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications