Sanju Samson: இந்த தங்கத்தையாடா ஒதுக்கி வச்சீங்க.. அரைசதம் அடித்த பின் சஞ்சு சாம்சன் செய்த செயல்!
கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பின் இந்திய அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று பொறுப்பை எடுத்துக் கொண்ட சஞ்சு சாம்சன், மீண்டும் கார்டு எடுத்து க்ரீஸில் நின்ற தருணம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை குவித்தது. கொல்கத்தா மைதானத்தில் இது சவாலான இலக்கு என்பதால், இந்திய ரசிகர்கள் கொஞ்சம் பரபரப்புடன் போட்டியை பார்த்தனர்.

இதையடுத்து அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அபிஷேக் சர்மா 10 ரன்களிலும், இஷான் கிஷன் 6 பந்துகளில் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் சஞ்சு சாம்சன் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி இணைந்தது. அப்போது மொத்த பொறுப்பையும் சஞ்சு சாம்சன் கையில் எடுத்தார். தேவைக்கேற்ப பவுணடரியும், ஒரு ரன்னையும் எடுத்துக் கொண்டே இருந்தார்.
சிறப்பாக ஆடிய அவர் 26 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அப்போது பெரிய கொண்டாட்டம் எதுவும் இல்லாமல், கடவுளை நோக்கி கைகளை உயர்த்தி அமைதியாக கொண்டாடினார். நீண்ட இடைவெளிக்கு பின் சஞ்சு சாம்சன் அடித்த அரைசதம் என்பதால், கொஞ்சம் எமோஷனலாகவும் இருந்தார். இருந்தாலும் இந்திய அணியை வெற்றி பெற வேண்டிய பொறுப்பும் சஞ்சு சாம்சன் வசம் இருந்தது.
இதனை உணர்ந்த சஞ்சு சாம்சன் மீண்டும் நடுவரிடம் கார்டு எடுத்து, க்ரீஸ் இழுத்தார். இதனை கவனித்த தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன் இந்த இன்னிங்ஸை பொறுப்புடன் கட்டமைக்கிறார். அவருக்கு ஒரு சிறந்த இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அதனை கடந்த பின், தனக்கு இன்னொரு பொறுப்பு உள்ளது என்பதை நன்றாக உணர்ந்துள்ளார்.
இதன் காரணமாக மீண்டும் ஒரு இன்னிங்ஸை தொடக்கம் முதல் கட்டமைப்பதாக கருதி விளையாடுவதாக பாராட்டினார். சஞ்சு சாம்சனின் இந்த செயல் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதேபோல் வழக்கத்தை விடவும் இந்த இன்னிங்ஸில் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கில் அமைதியும், தெளிவும் நிறையவே பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications