இதுதான் பொறுப்பு.. 54 பந்துகளில் சாதித்த சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கே அணியின் ஒற்றை நம்பிக்கை!
மும்பை: சிஎஸ்கே அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் சதம் விளாசி அசத்தி இருக்கிறார். முதல் பந்தில் தொடங்கிய சஞ்சு சாம்சன் கடைசி பந்து வரை களத்தில் நின்று சிஎஸ்கே அணி கவுரமான ஸ்கோரை எட்ட முக்கிய காரணமாக அமைந்தார். அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் தனது 2வது சதத்தையும் சஞ்சு சாம்சன் விளாசி மிரட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை குவித்துள்ளது. சிஎஸ்கே அணி பவர் பிளேவில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடவில்லை.

ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, சர்ஃபராஸ் கான், கார்த்திக் சர்மா, டிவால்ட் பிரெவிஸ் உள்ளிட்ட அனைவருமே விக்கெட்டை எளிதாக விட்டுக் கொடுத்து சென்றனர். ஆனால் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் விளையாடி சிஎஸ்கே அணியை கவுரவமான இலக்கை எட்ட காரணமாக அமைந்துள்ளார். சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் 6 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 101 ரன்களை குவித்தார்.
இந்த சீசனில் சஞ்சு சாம்சன் அடிக்கும் 2வது சதம் இதுவாகும். முதல் 3 போட்டிகளில் சஞ்சு சாம்சன் ஃபார்மின்றி தவித்த நிலையில், 4வது போட்டி முதல் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் விளையாடி வருகிறார். இன்னும் சொல்லப் போனால் சஞ்சு சாம்சன் கன்சிஸ்டன்சியுடன் விளையாடுவது சிஎஸ்கே ரசிகர்களிடையே நிம்மதியை அளித்திருக்கிறது.
இன்னும் சொல்லப் போனால் சஞ்சு சாம்சனை தவிர்த்து சிஎஸ்கே அணியில் நல்ல ஃபார்மில் இருந்த ஒரே பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே மட்டும்தான். தற்போது ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக விலகி இருப்பதால், சஞ்சு சாம்சனை மட்டுமே சிஎஸ்கே அணி நம்பி இருக்கிறது. இதனை உணர்ந்து சஞ்சு சாம்சன் தனது கவனத்தை சிதறவிடாமல் கடைசி ஓவர் வரை களத்தில் நின்று ரன்களை குவிக்கிறார்.
அதிலும் கடைசி ஓவரில் அகீல் ஹொசைனிடம் பேட்டிங்கை கொடுக்காமல், அழுத்தத்தை தன் மீது போட்டுக் கொண்டு 2 சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். இதனால் வரும் போட்டிகளில் இருந்தாவது சஞ்சு சாம்சனுக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் சிஎஸ்கே வீரர்கள் யாராவது அவருக்கு துணை நிற்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications