சஞ்சு சாம்சனுக்கு இருக்கும் 2 கண்டம்.. அதைமட்டும் கடந்துவிட்டால்.. ஆட்டநாயகன் விருதை எடுத்து வைங்க!
அகமதாபாத்: டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் சஞ்சு சாம்சன் முன்பாக 2 சிக்கல் உள்ளது. அந்த சிக்கலை மட்டும் கடந்துவிட்டால், இந்திய அணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருப்பதால், நிச்சயமாக பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இஷான் கிஷனுக்கு தொடக்கம் கிடைத்தாலும் அவரால் பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. அமெரிக்கா போட்டிக்கு சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை பார்க்கவே முடியவில்லை. திலக் வர்மா ஃபார்முக்கு வந்திருந்தாலும், ஃபினிஷிங் ரோலில் ஆடி வருகிறார்.
இதனால் இந்திய அணி சஞ்சு சாம்சனிடம் இருந்து ஸ்பெஷல் இன்னிங்ஸை எதிர்பார்த்திருக்கிறது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 50 பந்துகளில் 97 ரன்களை விளாசிய சஞ்சு சாம்சன், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 42 பந்துகளில் 89 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதனால் சஞ்சு சாம்சன் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
அதற்கேற்ப விளையாடி வருவதால், இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் ஆட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் சஞ்சு சாம்சனுக்கு இந்தப் போட்டியில் 2 சிக்கல்கள் இருக்கின்றன. முதல் சிக்கல் என்னவென்றால் நட்சத்திர வேகப்பந்துவீச்சாள்ர் மேட் ஹென்ரியும் பவுலிங்கை சமாளிப்பது தான். ஏனென்றால் 10ல் 9 முறை மேட் ஹென்ரி முதல் ஓவரில் விக்கெட்டை வீழ்த்திவிடுகிறார்.
இதனால் சஞ்சு சாம்சன் கொஞ்சம் எச்சரிக்கையுடன் மேட் ஹென்ரியை எதிர்த்து விளையாட வேண்டும். அதேபோல் ஸ்பின் ஹிட்டரான சஞ்சு சாம்சன் நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சான்ட்னரின் பந்துகளை சாதுர்யமாக எதிர்கொள்வது நல்லது. இன்னும் சொல்லப் போனால், அதனை சிவம் துபே போன்றோரிடம் ஒப்படைத்துவிடலாம். கடந்த போட்டியில் ஆதில் ரஷீத்தை இப்படிதான் சஞ்சு சாம்சன் ஆடி இருந்தார்.
இந்த இரு சவால்களையும் சஞ்சு சாம்சன் சமாளித்து விளையாடினால், எளிதாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். அதேபோல் சஞ்சு சாம்சனும் ஹாட்ரிக் ஆட்டநாயகன் விருதை தட்டிச் செல்வார். இதன் காரணமாக சஞ்சு சாம்சனின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications