சஞ்சு சாம்சன் அவுட்.. 3 மாற்றங்களை செய்யும் கம்பீர்.. நாளைய ஆட்டத்தில் இந்திய பிளேயிங் லெவன் என்ன?
விசாகப்பட்டிணம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சனின் இடத்தில் இஷான் கிஷன் கொண்டு வரப்பட்டு, நம்பர் 3 பேட்டிங் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றிவிட்டது. இதனால் 4வது டி20 போட்டியில் சில வீரர்களுக்கு கேம் டைம் மற்றும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கடைசி 2 போட்டிகளில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா, இன்னும் இந்திய அணிக்கு திரும்பவில்லை. இதனால் ஸ்ரேயாஸ் ஐயரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு உள்ளது. ஏற்கனவே வாஷிங்டன் சுந்தர் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி உள்ளது.
இதனால் ரவி பிஷ்னாய்யை தயார் செய்யும் வகையில் கடந்த ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் நாளைய ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி குல்தீப் யாதவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு வருண் சக்கரவர்த்தி கொண்டு வரப்படலாம். அதேபோல் ஹர்சித் ராணா இடத்தில் அர்ஷ்தீப் சிங் விளையாடுவார் என்றும் கருதப்படுகிறது.
இன்னொரு பக்கம் சஞ்சு சாம்சன் பெஞ்ச் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் இஷான் கிஷன் அதிரடியாக ஃபார்மில் உள்ளார். நம்பர் 3 இடத்தில் களமிறங்கிய இஷான் கிஷன், 2வது டி20 போட்டியில் 32 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். அதேபோல் கடந்த போட்டியில் 13 பந்துகளுக்கு 28 ரன்களை குவித்தார். ஆனால் சஞ்சு சாம்சனோ 3 போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இதனால் இஷான் கிஷனை தொடக்க வீரராக களமிறக்கிவிட்டு, விக்கெட் கீப்பராக கொண்டு வரப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளது. அதேபோல் இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடி வந்தவர் தான். சையத் முஷ்டாக் அலி தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி ஜார்க்கண்ட் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். இதனால் நம்பர் 3 இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications