யாரென்று தெரிகிறதா.. ஹாரி ப்ரூக் செய்த உதவி.. வான்கடேவில் 26 பந்தில் சஞ்சு சாம்சன் அட்ராசிட்டி!
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டியில் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் அடித்து சம்பவம் செய்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஆஃப் ஸ்பின்னர் வில் ஜாக்ஸ் பந்தில் அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதேபோல் ஆர்ச்சர் பந்தில் சஞ்சு சாம்சன் எச்சரிக்கையாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டிக் கொண்டே இருந்தனர். அதற்கேற்ப சஞ்சு சாம்சன் மிகவும் நிதானமாக விளையாடியதோடு, தேவையான நேரத்தில் அட்டாக்கும் செய்தார். ஆனால் ஆர்ச்சர் வீசிய 2வது ஓவரில் சஞ்சு சாம்சன் மிட் ஆன் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். அது நேராக ஹாரி ப்ரூக் கைகளுக்கு சென்றது.
ஆனால் அந்த எளிய கேட்சை ஹாரி ப்ரூக் தவறவிட்டார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி கொண்ட சஞ்சு சாம்சன் அதே ஓவரில் சிக்ஸ், பவுண்டரியை விளாசி தள்ளினார். இதன்பின் இஷான் கிஷனும் அட்டாக்கில் விளாசி தள்ள, சாம் கரணை சஞ்சு சாம்சன் ஒரு கை பார்த்துவிட்டார்.
சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் அடித்து சம்பவம் செய்துள்ளார். இன்னும் சொல்லப் போனால் மும்பை வான்கடே மைதானத்தில் சஞ்சு சாம்சன் ஆடியது அட்ராசிட்டியான இன்னிங்ஸ் என்றே சொல்லலாம்.
இதன் மூலமாக சஞ்சு சாம்சனின் விமர்சனங்களுக்கு பதிலடி அடிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக களமிறக்க இந்திய அணி நிர்வாகம் தயாராக இல்லை. அபிஷேக் சர்மா - இஷான் கிஷனையே நம்பியது. ஆனால் முக்கியமான இரு போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு அச்சாணியாக இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications