Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்து, முஸ்லீம், ஏசு.." வெஸ்ட் இண்டீஸை ஓடவிட்ட கையோடு சஞ்சு சாம்சன் செய்த செயல்! டிரெண்டிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில் சஞ்சு சாம்சனின் ஆட்டம் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதற்கிடையே போட்டியின் போது அவர் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் என மூன்று மதங்களைச் சேர்ந்த கடவுள்களையும் வணங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

டி20 உலக கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அதில் இப்போது சூப்பர் 8 போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் இணிகள் மோதின. இதில் வெல்லும் அணியே அரையிறுதிக்கு செல்லும் என்பதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

Sanju Samson Hindu Muslim Christian gods worship

இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 195 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 40 ரன்களை எடுத்தார் பும்ரா 2 விக்கெட்களை எடுத்தார். அடுத்துக் களமிறங்கிய இந்தியா அணி தொடக்கத்தில் தடுமாறியது. இருந்தபோதிலும் 19.2 ஓவர்களில் இந்திய அணி 199 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவின் வெற்றிக்கு அவரது ஆட்டமே முக்கியமாக கை கொடுத்தது. ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்த போதிலும், மற்றொரு பக்கம் சஞ்சு சாம்சன் நிலையாக விளையாடினார். தூக்கி அடித்து அவுட் ஆகாமல்.. பவுன்டரிகளை குறிவைத்து ஆடினார். இதனால் ரிஸ்க் இல்லாமல் அவர் ரன்களை குவித்தார். இறுதியில் 50 பந்துகளில் சஞ்சு சாம்சன் 97 ரன்களை குவித்தார். அதில் 4 சிக்சர்களும், 12 பவுன்டரிகளும் அடங்கும்.

சஞ்சு சாம்சனின் இந்த ஆட்டத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். ஒரு பக்கம் அனைவரும் அடித்து ஆடி அவுட் ஆன போதிலும், சஞ்சு சாம்சன் நிலையாக நின்று ஆடி இந்தியாவின் வெற்றிக்கு உறுதி செய்தார். நெட்டிசன்கள் முழுவதும் இதற்காக சஞ்சு சாம்சனை தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள்.

இதற்கிடையே போட்டியின் போது சஞ்சு சாம்சன் செய்த ஒரு செயல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதாவது சஞ்சு சாம்சான் போட்டியின் போது இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் என மூன்று மதங்களைச் சேர்ந்த கடவுள்களையும் வணங்கினார். மைதானத்தின் ஹெல்மெட்டை கழற்றிய அவர் மண்டியிட்டபடி, 3 கடவுள்களையும் வணங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+