சச்சின் மகள் இப்படி செய்யலாமா.. பீர் பாட்டிலுடன் கொண்டாடிய சாரா டெண்டுல்கர்! கொந்தளிக்கும் ரசிகர்கள்
மும்பை: கோவாவில் விடுமுறையை கொண்டாடிய சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், சாலையில் பீர் பாட்டிலுடன் சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. சச்சின் டெண்டுல்கர் வாழ்வின் ஒருபோதும் போதைப்பொருள் மற்றும் குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையுடன் இருந்த சூழலில், சாரா டெண்டுல்கர் பீர் பாட்டிலுடன் காணப்பட்டிருப்பது விவாதமாகி இருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 13 ஆண்டுகளை கடந்த போதும் கூட, சச்சின் டெண்டுல்கரின் விளம்பர வருவாய் இன்று வரை குறையவில்லை. தோனி, விராட் கோலி ஆகியோருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் விளம்பரங்கள் மூலமாக அதிக வருவாயை ஈட்டி வருகிறார். ஆனாலும் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட போதைப்பொருளை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்ததில்லை.

அதேபோல் குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களில் நடித்ததே கிடையாது. இவ்வளவு ஏன், கிரிக்கெட் வீரராக ஆட்டநாயகன் விருது பெற்ற போது கிடைத்த முதல் ஷேம்பைன் பாட்டிலை கூட சச்சின் டெண்டுல்கர் குடிக்கவில்லை. அந்த அளவிற்கு சச்சின் டெண்டுல்கர் எப்போதும் குடிப்பழக்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார்.
ரசிகர்களுக்கும் அதனை சச்சின் டெண்டுல்கர் எப்போதும் அறிவுறுத்தியும் வருகிறார். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் கோவாவில் பீர் பாட்டிலுடன் நடந்து செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வரும் சாரா டெண்டுல்கர், புதிய தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
சாரா டெண்டுல்கரும், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் காதலித்து வருவதாக தொடர்ச்சியாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப இருவரும் அவ்வப்போது சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சாரா டெண்டுல்கர் கோவாவுக்கு தனது நண்பர்களுடன் சென்றிருக்கிறார்.
அப்போது சாதாரணமாக சாலைகளில் சாரா டெண்டுல்கர் தனது தோழிகளுடன் பீர் பாட்டிலை எடுத்து கொண்டு நடந்து செல்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி இருக்கிறது. அதேபோல் சச்சின் டெண்டுல்கரின் கொள்கையுடன் ஒப்பிட்டு சாரா டெண்டுல்கரின் நடவடிக்கையை ரசிகர்கள் சிலர் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.
-
சச்சின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.. வைபவ் சூர்யவன்ஷிக்கு நடந்தது சாதாரணம்! பதானுக்கு பதிலடி -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
வைபவ் சூர்யவன்ஷியின் பலவீனம் இதுதான்.. குறி வைக்கும் குஜராத் அணி.. சாதிப்பாரா சிராஜ்? -
திறமை இருக்கு சரி.. அந்த பண்பை பாருங்க! சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி -
கெய்ல், வார்னரால் கூட செய்ய முடியாத சாதனை.. பவர்பிளேயில் 500 ரன்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! -
"நான் பொடியன் இல்ல.. என்னோட பேரு வைபவ் சூர்யவன்ஷி" தெறிக்கும் ராஜஸ்தான் மீம்ஸ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications