தரமான கேட்ச்.. என்னடா பண்ணிட்டு இருக்கான் இவன்.. ஸ்ரேயாஸ் ஐயரால் மிரண்டுபோன ரோகித், சூர்யகுமார்!
மும்பை: மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிக்சருக்கு அடித்த பந்தை பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரி லைனில் நின்று கொண்டு டைவ் அடித்து கேட்ச் பிடித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயரின் கேட்ச்சை அருகில் இருந்து பார்த்த ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் மிரண்டுபோன காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய டி காக் 60 பந்துகளில் 112 ரன்களை சேர்த்திருக்கிறார்.

அதேபோல் நமன் திர் 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் மும்பை அணி 200 ரன்களை கடக்கும் நிலையில் ஆடிக் கொண்டிருந்தது. கேப்டன் ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்ததால், பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப 18வது ஓவரை வீச மார்கோ யான்சன் வந்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா சிக்ஸ் அடித்தார். 2வது பந்து டாட் பாலாக வீசப்பட்டது. இதன்பின் 3வது பந்தையும் லாங் ஆன் திசையில் தூக்கி அடித்தார். நல்ல உயரம் சென்ற போதே, அது சிக்சர் என்று நம்பப்பட்டது. ஆனால் லாங் ஆன் திசையில் நின்றிருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், கண் மூடி திறக்கும் நொடியில் ஒரு டைவ் அடித்தார்.
அப்போது பந்தை கையில் பிடித்து உடனடியாக பவுண்டரி லைனுக்கு இந்த பக்கம் தூக்கி போட்டார். அது நேராக பார்ட்லெட் கைகளில் சென்று விழுந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் விழுந்த வேகத்தில் எழுந்து, உடனடியாக மும்பை ரசிகர்களிடம் சத்தமே கேட்கலையே என்று பாராட்டுக்களை கேட்டார். இதனால் ஒரு நொடி மொத்த வான்கடே மைதானமும் ஸ்டன்னாகியது.
இந்த சம்பவம் மும்பை அணி வீரர்களின் டக்கவ்ட் அருகே நிகழ்ந்தது. ஸ்ரேயாஸ் ஐயரின் டைவ் கேட்ச்சை அருகில் அமர்ந்து பார்த்த ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் ஒரு நொடி மிரண்டுவிட்டனர். ரோகித் சர்மா ஒரு கட்டத்தில், "என்ன பண்ணிட்டு இருக்கான் இவன்.. என்ன நடந்துச்சு" என்று கேட்கும் வகையில் சூர்யகுமார் யாதவிடம் சைகை காட்டினர். இது இந்திய ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications