சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியை காண்பதற்கு சச்சின் டெண்டுல்கரின் மகன் சாரா டெண்டுல்கர் நேரில் வந்துள்ளார். குஜராத் அணிக்காக சுப்மன் கில்லும், லக்னோ அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கரும் ஆடுகின்றனர். அதில் அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி சானியா சந்தோர் லக்னோ அணி ஜெர்சி அணிந்திருக்கும் சூழலில், சாரா டெண்டுல்கர் நீல நிற உடை அணிந்து அமர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 164 ரன்களை சேர்த்தது. இதையடுத்து குஜராத் அணிக்காக சுப்மன் கில் - சாய் சுதர்சன் கூட்டணி களமிறங்கி பேட்டிங் ஆடி வருகிறது. இந்தப் போட்டியில் நேரில் பார்க்க சச்சின் டெண்டுல்கர் மகன் சாரா டெண்டுல்கர் வந்துள்ளார்.

Shubman Gill

அவருடன் அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி சானியா சந்தோக்கும் வந்திருக்கிறார். அர்ஜுன் டெண்டுல்கர் இந்த சீசனில் லக்னோ அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டு வருகிறார். நீண்ட ஆண்டுகளாகவே சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்தப் போட்டியை சானியா சந்தோக் லக்னோ அணியின் ஜெர்சியை அணிந்து பார்த்து வருகிறார். மறுபக்கம் சாரா டெண்டுல்கர் நீல நிற உடை அணிந்து அமர்ந்துள்ளார். இதனால் சாரா டெண்டுல்கர் குஜராத் அணிக்கு ஆதரவு அளிப்பதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் வேறு எந்தப் போட்டியையும் நேரில் காண்பதற்கு சாரா டெண்டுல்கர் வரவில்லை.

அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க ஏராளமான முறை சாரா டெண்டுல்கர் வந்துள்ளார். இதனால் குஜராத் அணி தங்களின் வெற்றியை தொடரும் என்றும் ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்த சீசனில் சுப்மன் கில் இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் இன்னிங்ஸை ஆடவில்லை. இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல் அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணத்திற்கு பின் விளையாடும் முதல் ஐபிஎல் தொடர் இதுவாகும். புதிய அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், இம்முறையாவது லக்னோ அணியின் பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. மேலும் லக்னோ அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+