நிச்சயதார்த்த மோதிரம் எங்கே? ஸ்மிருதி மந்தனா கைகளில் நடந்த மாற்றம்.. பலஷ் முச்சலுடன் பிரேக் அப்?
மும்பை: இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் நிச்சயதார்த்த மோதிரம் இல்லாதது ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது. நீண்ட நாள் காதலன் பலஷ் முச்சல் உடனான திருமணம் திடீரென நின்றுபோன சூழலில், அவர் ஒரு வாரங்களாக அமைதி காத்து வந்தார். தற்போது டூத் பேஸ்ட் விளம்பரத்திற்காக சோசியல் மீடியாவை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்.
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா முதலிடத்தை பிடித்தார். இந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. அதனை அவரின் நீண்ட நாள் காதலன் பலஷ் முச்சல் உறுதி செய்திருந்தார்.

மகாரஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் பிரம்மாண்டமாக ஸ்மிருதி மந்தனாவின் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இறுதியாக நவம்பர் 23ஆம் தேதி ஸ்மிருதி மந்தனா - பலஷ் முச்சல் திருமணம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக நடந்த சடங்குகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகின.
ஸ்மிருதி மந்தனாவின் திருமண நிகழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள் கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் திடீரென நவம்பர் 22ஆம் தேதி ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நிறுத்தப்பட்டதாக தெரிய வந்தது. திருமணத்தின் போது ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதன்பின் சிறிது நேரத்தில் பலஷ் முச்சலும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இதனிடையே ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமணம் தொடர்பான அத்தனை பதவுகளையும் நீக்கினார். அதேபோல் பலஷ் முச்சல் மீதான சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்ததாக சில பதிவுகள் வெளியாகியது.
இது தெரிய வந்ததால், ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்றதாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஸ்மிருதி மந்தனா தரப்பில் மீண்டும் திருமணம் நடக்கும் என்று யாரும் சொல்லவில்லை. பலஷ் முச்சலின் குடும்பத்தினர் மட்டுமே திருமணம் நடக்கும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா மீண்டும் சோசியல் மீடியா பக்கம் திரும்பி இருக்கிறார்.
டூத் பேஸ்ட் பிராண்ட் விளம்பரத்தில் நடித்துள்ள ஸ்மிருதி மந்தனாவின் கைகளில் நிச்சயதார்த்த மோதிரம் இருக்கவில்லை. இது பேசுபொருளாகி இருக்கிறது. அதேபோல் இந்த விளம்பரம் திருமணத்திற்கு முன்பு படமாக்கப்பட்டதா என்பதும் முழுமையாக தெரியவில்லை. மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் ஸ்டேடியத்தில் வைத்து பலஷ் முச்சல் ஸ்மிருதி மந்தனாவுக்கு மோதிரத்தை அணிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications