என்ன நடந்தாலும் சரி.. அது மாறாது.. ஸ்மிருதி மந்தனா எடுத்த சரியான முடிவு.. சகோதரர் கொடுத்த அப்டேட்!
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தன் கல்யாணத்தை ரத்து செய்த சூழலில், அவரின் சகோதரர் ஒரு பாசிட்டிவ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். கல்யாணம் நின்றுபோன சோகத்தில் ஸ்மிருதி மந்தனா வீட்டிலேயே இருக்காமல், உடனடியாக அடுத்தடுத்த பணிகளை தொடங்கி இருக்கிறார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது கல்யாணத்தை ரத்து செய்த சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. ஸ்மிருதி மந்தனா - பலஷ் முச்சல் இருவரும் 2019ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். சுமார் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா தன்னுடைய ரிலேஷன்ஷிப் குறித்து பொதுவெளியில் அறிவித்திருந்தார்.

தனது நீண்ட நாள் காதலன் பலஷ் முச்சல் உடனான புகைப்படங்களை ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இவர்களின் காதல் திருமணத்தில் முடியவிருந்த சூழலில், திடீரென பலஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் உறவில் இருக்கும் சில சேட்களும், புகைப்படங்களும் வெளியாகின. ஸ்மிருதி மந்தனாவுடன் உறவில் இருக்கும் போதே, பலஷ் முச்சல் இப்படியான செயலில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது.
இந்த விவகாரம் திருமணத்திற்கு முதல் நாள் ஸ்மிருதி மந்தனாவுக்கு தெரிய வந்தது. இதனால் உடனடியாக திருமணத்தை நிறுத்தினார். இதனால் ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி, திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனாலும் பலஷ் முச்சல் மற்றும் அவரின் சகோதரி தரப்பில் மீண்டும் திருமணம் நடக்கும் என்று சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் 3 நாட்களுக்கு முன்பாக ஸ்மிருதி மந்தனா தன்னுடைய திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தார். அதில், என்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி பொதுவெளியில் விவாதிப்பதை விரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். என்னுடைய திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல் பலஷ் முச்சல் தரப்பில், இந்த சூழலை அமைதியாக கடக்க விரும்புகிறேன். தேவையின்றி என் மீது வதந்திகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஸ்மிருதி மந்தனா திருமணத்தை நிறுத்திய அடுத்த நாளே, இன்ஸ்டாகிராமில் சக இந்திய வீராங்கனைகள் பலஷ் முச்சலை பின் தொடர்வதை நிறுத்தினர்.
இதனால் பல்வேறு யூகங்கள் தொடங்கின. இந்த நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் சகோதரர் ஷ்ரவன் ஒரு பாசிட்டிவ் அப்டேட் கொடுத்துள்ளார். அதில் ஸ்மிருதி மந்தனா உடனடியாக கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி இருக்கிறார். இதன் மூலமாக சோர்வுடனோ, கவலையுனோ ஸ்மிருதி மந்தனா வீட்டில் இருக்க விரும்பவில்லை என்று தெரிகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications