14 ஆண்டு உழைப்பு.. சுனில் நரைனின் தரமான சாதனை.. 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வெளிநாட்டு வீரர்!
ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணியின் ஜாம்பவான் வீரரான சுனில் நரைன் பிரம்மாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வெளிநாட்டு வீரர் என்ற புதிய வரலாற்றை சுனில் நரைன் வீழ்த்தியதோடு, ஒரே அணிக்காக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் கேகேஆர் அணிக்காக ஆடிய சுனில் நரைன் 4 ஓவர்களில் 31 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக சுனில் நரைன் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், சலில் அரோராவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் நரைன் இந்த மைல்கல்லை எட்டினார். நரைன் வீசிய 'கேரம் பால்' (Carrom Ball) பந்தை கணிக்கத் தவறிய அரோரா, கிளீன் போல்டாகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து இஷான் கிஷனின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மூன்று பந்துவீச்சாளர்கள் மட்டுமே 200 விக்கெட்டுகள் என்ற இலக்கை எட்டியுள்ளனர். யுஸ்வேந்திர சஹால் 228 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 215 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 200 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர். இதில் சஹால் மற்றும் புவனேஷ்வர் குமார் இந்தியர்கள் என்பதால், இந்த இலக்கை எட்டிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை நரைன் படைத்துள்ளார்.
2012ஆம் ஆண்டு முதல் கேகேஆர் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் சுனில் நரைன், கடந்த 14 ஆண்டுகளாக அந்த அணியின் முதுகெலும்பாகத் திகழ்கிறார். விக்கெட்டுகள் எடுப்பது மட்டுமல்லாமல், அவரது எகனாமி ரேட் 6.79 ஆக உள்ளது. ஐபிஎல் தொடரில் 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் இவரே மிகவும் சிக்கனமாகப் பந்துவீசியவர்.
இந்த சீசனிலும் இதுவரை 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நரைன், பேட்டிங்கிலும் அதிரடி காட்டி வருகிறார். இவரது இந்த ஆல்-ரவுண்ட் திறமை கேகேஆர் அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. வயதானாலும் நரைனின் சுழற்பந்துவீச்சு இன்னும் மர்மமாகவே இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications