468 நாட்களுக்கு பின்.. ஒரே ஓவரில் 24 ரன்கள்.. தரமான சம்பவம் செய்த சூர்யகுமார்.. பீஸ்ட் இஸ் பேக்!

Subscribe to Oneindia Tamil

ராய்பூர்: 468 நாட்களுக்கு பின் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஃபார்முக்கு வந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் மிட்சல் சான்ட்னர் 27 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன்பின் வந்த இந்திய அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது.

Suryakumar Yadav

தொடக்க வீரர் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகியும், சஞ்சு சாம்சன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து இஷான் கிஷன் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி இணைந்தது. பவர் பிளேவை பயன்படுத்தி இஷான் கிஷன் ஒரு பக்கம் வெளுத்து வாங்க, அதன்பின் சீனுக்குள் வந்த சூர்யகுமார் யாதவ், பழைய பீஸ்ட் ஃபார்மில் ஆடினார்.

அதிலும் ஃபால்க்ஸ் வீசிய 9வது ஓசரில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 24 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ், ஒரு வழியாக 23 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 468 நாட்களுக்கு பின் சூர்யகுமார் யாதவ் அடிக்கும் அரைசதம் இதுவாகும். இதன்பின் சூர்யகுமார் யாதவ் பட்டாசாய் பறக்கவிட, சிவம் துபே மறுபக்கம் ராக்கெட்டை கொளுத்துவிட்டார்.

இதனால் இந்திய அணி 15.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 82 ரன்களையும், சிவம் துபே 18 பந்துகளில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 36 ரன்களையும் விளாசினர். டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளது.

இப்படியான நேரத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். அதிலும் அதிக அழுத்தம் நிறைந்த நேரத்தில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் ஆடி ஃபார்முக்கு வந்துள்ளார். இதனால் இந்திய டி20 அணியின் மிடில் ஆர்டர் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+