Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாப்பாட்டுக்கு கூட வழியில்லை.. கிழிந்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றேன்.. கலங்கிய நடராஜன்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: சில நேரங்களில் சாப்பாடு கூட இல்லாமல் கிழிந்த உடையுடன் கல்லூரிக்கு சென்றேன் என்று நட்சத்திர கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். எனக்கும் படிப்புக்கும் மிகவும் தூரம் என்று கூறிய நடராஜன், எனக்குத் தெரிந்தது கிரிக்கெட் மட்டும்தான் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மிக முக்கியமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் நடராஜன். 2021 ஆஸ்திரேலியா டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் நடராஜன் இந்திய அணிக்காக ஆடிய ஆட்டம் இன்று தமிழக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் ஐபிஎல் தொடரில் நடராஜன் மிகச்சிறப்பாக பவுலிங் செய்து வந்தார். இதனால் அவர் மீது நம்பிக்கை வைத்து டெல்லி அணி ரூ.10.75 கோடிக்கு வாங்கியது.

T Natarajan shares his struggles

ஆனால் காயம் காரணமாக நடராஜனால் முழுமையாக விளையாட முடியவில்லை. சில போட்டிகளில் மட்டுமே நடராஜன் களமிறக்கப்பட்டார். இதனால் நடராஜனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகப் பேசத் தொடங்கினார்கள். ஆனால் நடராஜன் மீண்டும் டிஎன்பிஎல் தொடர் மூலமாகக் கம்பேக் கொடுத்துள்ளார். அவர் முன்னணி பவுலராக இருந்த திருப்பூர் தமிழன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இதன் மூலமாக நடராஜனும் மிகச்சிறந்த ஃபார்முக்கு வந்துள்ளார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் நடராஜனின் யார்க்கர்களை கட்டாயம் பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நடராஜன் கலந்து கொண்டார். அங்கு நடராஜன் பேசிய காணொளி சமூகம் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

அதில் நடராஜன் பேசுகையில், கிராமங்களில் யாராவது விளையாட்டைத் தேர்வு செய்து, அதன் மூலமாக பணியைப் பெறவோ அல்லது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவோ முயற்சி செய்தால், பின்னால் இருந்து பலரும் புறம் பேசுவார்கள். இவனால் முடியாது, நடக்காது என்றெல்லாம் சொல்வார்கள். வீட்டின் சுமையை பிரித்து கொண்டு வேறு வேலையைப் பார் என்பார்கள். என்னையும் அப்படிதான் கூறினார்கள்.

ஏனென்றால் 20 வயதில் தான் நான் கிரிக்கெட் பந்தையே கையில் எடுத்தேன். அதுவரை டென்னிஸ் பந்தில் மட்டும் விளையாடினேன். எனக்கு 3 தங்கை, ஒரு தம்பி.. அப்பா நெசவு வேலைக்கு செல்வார்.. அம்மா ரோட்டுக் கடையில் சிக்கன் விற்றார்.. சின்ன வீடு.. எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம். படிப்பு வரவில்லை.. எனக்குத் தெரிந்தது எல்லாம் கிரிக்கெட் மட்டும்தான்.

உள்ளூர் கிரிக்கெட் விளையாடி நிறையக் கோப்பைகளை வீட்டில் வைத்திருந்தேன். அந்த பணத்தை வைத்துதான் என்னை ஸ்கோர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரிக்கு அனுப்பினார்கள். முன்பெல்லாம் வாய்ப்பு இல்லை என்பார்கள். ஆனால் இப்போது வாய்ப்புகள் ஏராளமான இருக்கிறது. இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வருவதில்லை. பள்ளி முடித்து விளையாடக் கூட வருவதில்லை. டிவி முன்பாகவும், மொபைலுடனும் அமர்கிறார்கள். விளையாட்டுக்கு மூலதனம் நமது உடல்தான்.

உடலை நன்றாகப் பார்த்துக் கொண்டால், நாம் சிறப்பாக விளையாட முடியும். நானும் வாழ்க்கையில் நிறையக் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். சாப்பாட்டுக்கு வழியில்லாமல், பேருந்து கட்டணத்திற்கு காசில்லாமல், கிழிந்த ஆடையுடன் பள்ளிக்கு, கல்லூரிக்கு சென்றுள்ளேன். அப்படியான சூழலில் இருந்து முன்னேறி இருக்கிறேன். ஆனால் உங்களுக்கு நல்ல சூழல் அமைந்திருக்கிறது. அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. பள்ளிக் காலத்தில்தான் சிறந்த நண்பர்கள் அமைவார்கள்.. கஷ்ட காலங்களில் நண்பர்களின் தேவை புரியும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+