Sanju Samson: சஞ்சு சாம்சன் பெயரை சொன்ன அடுத்த நொடி.. சேப்பாக்கம் மைதானத்தை அதிரவிட்ட ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிங்கு சிங் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, அக்சர் படேல் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை சூர்யகுமார் யாதவ் அறிவித்த போது, ஒட்டுமொத்த சேப்பாக்கம் மைதானத்தையும் ரசிகர்கள் அதிர வைத்தனர்.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பவுலிங்கை தேர்வு செய்தார். சேப்பாக்கம் மைதானத்தில் சேஸிங் செய்யும் அணிக்கு வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

T20 World Cup 2026

பனிப்பொழிவு இருக்கும் பட்சத்தில் இந்திய பவுலர்கள் சிரமப்படுவார்கள் என்று கணிக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் நீக்கப்பட்டு அக்சர் படேல் மற்றும் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 போட்டிகளில் 4 முறை இந்திய அணி முதல் ஓவரிலேயே தொடக்க வீரரை இழந்திருக்கிறது. அபிஷேக் சர்மா 3 முறை டக் அவுட்டும், இஷான் கிஷன் ஒருமுறையும் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கின்றனர். அதேபோல் டாப் 3 பேட்ஸ்மேன்களில் மூவரும் இடதுகை பேட்ஸ்மேன்கள். இதனால் எதிரணி ஆஃப் ஸ்பின்னரை வைத்து அட்டாக்கை தொடங்குகின்றன.

இதனை சமாளிக்கவே சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சூர்யகுமார் யாதவ் சஞ்சு சாம்சனின் பெயரை கூறிய போது சேப்பாக்கம் மைதானத்தின் ரசிகர்கள் கரகோஷமெ எழுப்பி அதிர வைத்தனர். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாட சஞ்சு சாம்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட பின் சஞ்சு சாம்சன் சேப்பாக்கம் மண்ணில் விளையாடும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கம்பேக் போட்டியில் சஞ்சு சாம்சன் தனது தடத்தை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+