30 ரன்னுக்கு மேல வண்டி ஓடாது போல.. திலக் வர்மாவால் உருவாகும் புது பிரச்சனை.. பாவம் கவுதம் கம்பீர்!
அகமதாபாத்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா மோசமான ஃபார்மில் ஆடி வருவது விவாதமாகி இருக்கிறது. 4 போட்டிகளிலும் திலக் வர்மாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்த போதும், அவரால் அதனை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாது ரசிகர்களை புலம்ப வைத்திருக்கிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் 7 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும் திலக் வர்மா சிக்சருடன் தனது ரன் கணக்கை தொடங்கினார்.

ஆனால் அதன்பின் திலக் வர்மா அதிரடியாக விளையாட வில்லை. அதிக டாட் பால்களை ஆடிய திலக் வர்மா, அதனை சரி செய்ய பவுண்டரியை விளாசினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி 51 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன்பின் அடுத்த 2 ஓவர்களில் திலக் வர்மா - சூர்யகுமார் ஜோடி ஒரு பவுண்டரியை கூட அடிக்கவில்லை. இதனிடையே சூர்யகுமார் யாதவுக்கு ஒரு கேட்சும் மிஸ்ஸானது.
இதையடுத்து வான் டர் மெர்வ் வீசிய பந்தில் திலக் வர்மா கொடுத்த கேட்சை வான் பீக் அபாரமாக பிடித்து அசத்தினார். இதனால் திலக் வர்மா 27 பந்துகளில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்தப் போட்டியிலும் நல்ல தொடக்கம் கிடைத்த போதும், திலக் வர்மா அதனை வீணடித்திருக்கிறார். இது ஒவ்வொரு போட்டியிலும் தொடர் கதையாகி வருகிறது.
அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 25 ரன்களும், நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 25 ரன்களும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 24 பந்துகளில் 25 ரன்களும் எடுத்துள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் 20 பந்துகளையாவது விளையாடும் திலக் வர்மா, கொஞ்சம் பொறுப்பின்றி விக்கெட்டை பறிகொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
ஏற்கனவே அபிஷேக் சர்மா தொடந்து டக் அவுட்டாகி வரும் சூழலில், திலக் வர்மா அவுட் ஆஃப் ஃபார்மில் இருப்பது ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது. மிடில் ஓவர்களில் அதிரடியாக விளையாடக் கூடியவரான திலக் வர்மா, பவர் பிளேவில் அமைதியாக ஆடுவது இந்திய அணிக்கும் பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. இதனால் அடுத்தப் போட்டிக்குள் கம்பீர் சரி செய்வாரா என்ற விவாதமும் தொடங்கியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications