என் கிரிக்கெட்டை மீட்டெடுக்க காரணமே மஹிகா சர்மா தான்.. காதலியை புகழ்ந்து தள்ளிய ஹர்திக் பாண்டியா!
மும்பை: என் கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் உற்சாகத்துடன் விளையாட முக்கிய காரணம் மஹிகா சர்மா தான் என்று இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். சிறுவயதில் கிரிக்கெட் மீது இருந்த அளவிலா காதலை மீட்டெடுக்க மஹிகா சர்மா உதவியதாகவும் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அதிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ஹர்திக் பாண்டியா. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று ஹர்திக் பாண்டியா உற்சாகத்துடன் இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

காதலியுடன் வலம் வரும் ஹர்திக்
இந்த நிலையில் தாம் மீண்டும் கிரிக்கெட்டை உற்சாகமாக விளையாட முக்கிய காரணமே மஹிகா சர்மா தான் என்று ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் தனது காதலி மஹிகா சர்மா தன்னுடன் ஹர்திக் பாண்டியா அழைத்து வருகிறார். மும்பை, டெல்லி, கொழும்பு என்று 3 மைதானங்களிலும் மஹிகா சர்மா காணப்பட்டார்.
ஹர்திக் பாண்டியா பேட்டி
இதனிடையே ஹர்திக் பாண்டியா தன்னுடைய கழுத்தின் பின் பகுதியில் M என்ற எழுத்தை மட்டும் பச்சை குத்தி இருக்கிறார். M என்றால் மஹிகா என்று அர்த்தமாகும். மஹிகா சர்மா தொடர்பாக ஹர்திக் பாண்டியா பேசுகையில், எப்போதும் எனக்கும் ஒரு குழந்தை இருந்து கொண்டே இருக்கும். அந்த குழந்தைக்கு எப்போதும் பவுலிங் மீதுதான் அதிக ஈடுபாடு இருக்கும்.
திறமை வெளிப்படவில்லை
எனக்கு எப்போதும் பவுலிங்கின் போது அதீத நம்பிக்கை இருக்கும். இருந்தாலும் மனதிற்கு பேட்டிங் அதிகம் பிடிக்கும். கடந்த ஐபிஎல் தொடருக்கு பின் என்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். என்னை பொறுத்தவரை இன்னும் 40% திறமையை கூட வெளிப்படுத்தவில்லை என்று நம்புகிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக என்ன கனவுடன் இருக்கிறேன்..
வாழ்க்கைக்குள் வந்த மஹிகா சர்மா
எதற்காக உழைக்கிறேன்.. எவ்வளவு பயிற்சி செய்கிறேன் என்று நன்றாக தெரியும். ஆனால் என்னுடைய இலக்கை இன்னும் எட்டவில்லை. அதனை வெளிப்படுத்த சிறிது நேரம் எடுத்துக் கொண்டேன். அப்படியான நேரத்தில் தான் மஹிகா சர்மா என் வாழ்க்கைக்குள் வந்தார். நாங்கள் அந்த திறமையை எப்படி வெளிக் கொண்டு வருவது என்பது தொடர்பாக பேசிக் கொண்டே இருக்கிறோம்.
என்சிஏ பயிற்சி
எனக்குள் இருக்கும் குழந்தையை மீண்டும் மீட்டெடுக்க மஹிகா சர்மா தான் காரணம். ஒவ்வொரு முறையும் பேட்டிங்கின் போது ஒரு ஆவல் உருவாகிறது. இதற்காக பின்னணியில் ஏராளமான நேரங்களை செலவிட்டேன். என்சிஏவில் மதியம் 3.30 மணிக்கு சென்றால், இரவு 12.30 மணி வரை பேட்டிங் பயிற்சி செய்தேன். பயிற்சி முடித்து புறப்படும் கடைசி ஆளாக இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
3வது காதலி
ஹர்திக் பாண்டியாவின் 3வது காதலியாக மஹிகா சர்மா இருக்கிறார். முதலில் நடாஷா ஸ்டான்கோவிக் உடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஹர்திக் பாண்டியா, பின்னர் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் 2 ஆண்டுகளாக ஜஸ்மீன் வாலியாவுடன் காதல் உறவில் இருந்த ஹர்திக் பாண்டியா, தற்போது இந்திய மாடலான மஹிகா சர்மாவுடன் காதலில் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications