ICC Rankings: ஐசிசி டி20 தரவரிசை.. சரிந்த சஞ்சு சாம்சன், திலக் வர்மா.. உச்சத்தை நெருங்கிய பும்ரா!

Subscribe to Oneindia Tamil

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடர் அரையிறுதி சுற்றை எட்டி இருக்கும் சூழலில், ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான திலக் வர்மா சரிவை சந்தித்துள்ளார். அதேபோல் டாப் 10 வரிசைக்குள் 4 இந்திய பேட்ஸ்மேன்கள் இடம்பிடித்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்தியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து நியூசிலாந்து அணியும் விளையாட உள்ளன. சமபலம் வாய்ந்த அணிகள் விளையாடுவதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

T20 World Cup 2026

இந்த நிலையில் டி20 பேட்ஸ்மேன்கள், பவுலர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் 4 இந்திய பேட்ஸ்மேன்கள் இடம்பிடித்துள்ளனர். இந்திய அதிரடி வீரர் அபிஷேக் சர்மா முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதேபோல் இஷான் கிஷன் 3 இடங்கள் முன்னேறி 5வது இடத்திற்கு வந்துள்ளார்.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6வது இடத்திலும், திலக் வர்மா 3 இடங்கள் சரிந்து 7வது இடத்தையும் பிடித்துள்ளார். அதேபோல் சிவம் துபே 13 இடங்கள் முன்னேறி 28வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார். சஞ்சு சாம்சன் 65வது இடத்தையும் பிடித்துள்ளார். அதேபோல் பவுலிங்கை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

அதேபோல் இந்திய அணியின் பவுலிங் 7 இடங்கள் முன்னேறி 8வது இடத்தை பிடித்துள்ளார். ஆனால் மற்ற இந்திய பவுலர்களான அர்ஷ்தீப் சிங் 3 இடங்கள் சரிந்து 19வது இடத்தையும், அக்சர் படேல் 10 இடங்கள் சரிந்து 24வது இடத்தையும், குல்தீப் யாதவ் 9 இடங்கள் சரிந்து 34வது இடத்தையும், ஹர்திக் பாண்டியா 5 இடங்கள் சரிந்து 51வது இடத்தையும் பிடித்துள்ளனர். பேட்ஸ்மேன்களை விடவும் பவுலர்கள் சரிவை சந்தித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+