டி20 உலகக்கோப்பை.. இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கம்.. சீனுக்குள் வந்த இஷான் கிஷன்!
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து துணைக் கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். அவரது இடத்தில் இஷான் கிஷன் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, ஜித்தேஷ் சர்மா நீக்கப்பட்டு ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக மாறியுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்க உள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கவுள்ள இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் துணைக் கேப்டனாக இருந்த சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். சுப்மன் கில் இடத்தில் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஜித்தேஷ் சர்மா நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு ரிங்கு சிங் கொண்டு வரப்பட்டுள்ளார்.
அதேபோல் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகியோர் இருக்கின்றனர். இதில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் இருவரும் ஆல்ரவுண்டர்களாகவும் இருப்பார்கள். அதேபோல் அக்சர் படேலுக்கு துணைக் கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்களாக அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங் தேர்வாகி இருக்கின்றனர்.
விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா ஆகியோரும், வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முகமது சிராஜ், ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெறவில்லை.
ஜெய்ஸ்வாலின் இடத்தில் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்திய அணி வலிமையாகவே இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதே அணிதான் நியூசிலாந்து டி20 தொடரிலும் விளையாடும் என்பதால், இந்திய அணியின் பிளேயிங் லெவனும் முன்னதாக ரசிகர்களுக்கு புரிய வரும் என்று பார்க்கப்படுகிறது.
இந்திய அணி: சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், பும்ரா, ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.












Click it and Unblock the Notifications