சிஎஸ்கே 2.0.. முதல்முறையாக ஆலோசகர் பதவியை ஏற்கிறாரா தோனி? ஜாகீர் கான் நியமிக்கப்பட்ட போதே சந்தேகம்!
சென்னை: சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தோனி பொறுப்பேற்று உள்ளார். இதற்கு முன்பாகவே இந்திய அணியின் ஆலோசகராக தோனி ஒருமுறை செயல்பட்டுள்ளார். 2021 டி20 உலகக்கோப்பை தொடரின் போது தோனியை ஆலோசகராக செயல்பட்டுள்ளார். இதனால் தோனி ஆலோசகர் பதவியை ஏற்பது முதல்முறை அல்ல என்று பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே அணியின் ஆலோசகராக ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த அதே பதிவில், அவர் ஆலோசகராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர். இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த முடிவுகளையும் தோனி எடுப்பார் என்று கருதப்படுகிறது.

களத்திற்கு வெளியிலும், களத்திற்கு உள்ளேயும் சிஎஸ்கே அணி என்ன செய்ய வேண்டும் என்பதை தோனி முடிவு செய்வார். அதேபோல் பிளேயிங் லெவன், ஐபிஎல் ஏலம் உள்ளிட்டவற்றிலும் தோனியின் பங்கு அதிகமாக இருக்கும். இதனிடையே தோனி முதல்முறையாக ஆலோசகர் பதவியில் அமர்கிறார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் தோனி ஏற்கனவே ஒருமுறை ஆலோசகராக பணியாற்றி இருக்கிறார். 2021 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டுள்ளார். அதில் இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. தற்போது மீண்டும் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக பணியை தொடங்க உள்ளார்.
இதன் மூலமாக சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக 2.0 இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறது. அதேபோல் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம செய்யப்பட்ட போதே பல்வேறு பேச்சுகள் எழுந்தன. தோனி ஆலோசகர் பதவியில் அமர்வாரா என்ற கேள்வி வந்தது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி பேட்டிங் பயிற்சியாளரை நியமனம் செய்யவில்லை.
தோனி டெக்னிக்கலாக பெரிய விஷயங்களை சொல்லி கொடுக்க மாட்டார் என்றாலும், நம்பிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் சிறப்பாக செயல்பட முடியும். அதேபோல் அணியின் தேவை அறிந்து, அதற்கேற்க முடிவுகளை எடுப்பதில் வல்லவர். இதனால் தோனி ஆலோசகர் பதவிக்கு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
