IPL 2026: யாருமே செய்யாத சாதனையை படைத்த வைபவ் சூர்யவன்ஷி.. ஆனால் மோஷின் கான் தந்த ஷாக்
லக்னோ: ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் பேட்டிங்கில் சொதப்பினார். வலது கை ஆட்டக்காரரான பராக், ஒரு ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க முயன்று, ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து 19 பந்துகளில் வெறும் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பராக்கின் இந்த விக்கெட்டால், ராஜஸ்தான் ராயல்ஸ் 66 ரன்களுக்குள் தனது நான்காவது விக்கெட்டை இழந்தது. பிரின்ஸ் யாதவ் மணிக்கு 139 கி.மீ வேகத்தில் வீசிய சீம்-அப் டெலிவரியை சிக்சருக்கு அடிக்கும் நோக்கில் செயல்பட்ட பராக், பந்தை லாங் ஆனிலிருந்த நிக்கோலஸ் பூரனிடம் கேட்ச் ஆனார்.

ஐபிஎல் 2026 சீசனில் ரியான் பராக்கின் பேட்டிங் தொடர்ந்து ஏமாற்றமளித்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த பிறகு, அவர் 8, 20, 3, 4, 12, 20 போன்ற மிகக் குறைந்த ஸ்கோர்களைப் பதிவு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக, இந்த சீசனில் எட்டு இன்னிங்ஸ்களில் அவர் 81 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ஆனால், இதற்கு முந்தைய சீசன்கள் சிறப்பாக அமைந்தன. ரியான் பராக் ஐபிஎல் 2024 இல் 14 இன்னிங்ஸ்களில் 573 ரன்களையும், ஐபிஎல் 2025 இல் 14 இன்னிங்ஸ்களில் 393 ரன்களையும் குவித்துள்ளார். மேலும், சஞ்சு சாம்சன் காயமடைந்த போது, ஐபிஎல் 2025 சீசனில் அணியின் தற்காலிக கேப்டனாகவும் பராக் பொறுப்பு வகித்துள்ளார்.
ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக சஞ்சு சாம்சன் சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்ட நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த சீசனுக்கான முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த 2026 ஏலத்திற்கு முன்னதாக ₹14 கோடி என்ற ஒரு பெரிய தொகைக்கு பராக்கை ராஜஸ்தான் தக்கவைத்தது.
ரியான் பராக்கின் தொடர்ச்சியான இந்தச் சறுக்கல்கள் குறித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். "பராக் வழக்கம் போல், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எதையும் செய்யாமல், ஸ்டைலாக வாக் செய்வதற்கு மட்டுமே தகுதியானவர். ரஹானேவும் இவரும் யாரு மோசமான பேட்டர் என்பதில் போட்டி போடுகிறார்கள். பராக் ஒரு சீசனில் நன்றாகச் செய்தார், அதோடு போய்விட்டது" என்று ஸ்ரீகாந்த் காட்டமாகப் பேசினார்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை, பராக் இந்த சீசனில் மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், ஹெலிகாப்டர் ஷாட் ஆடி ரியான் பராக் கேட்ச் ஆனதை குறிப்பிட்டு ரசிகர்களுக்கு மனதில் இவருக்கு பெரிய தோனினு நினைப்பா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications