Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த சின்னப் பையனை பார்த்தாவது கத்துக்கோங்க கில்.. என்னா அடி.. 200ஐ மிஸ் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

Subscribe to Oneindia Tamil

துபாய்: யு19 ஆசியக் கோப்பை தொடரில் ஐக்கிய அரசு அமீரகம் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி இரட்டை சதத்தை தவறவிட்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் சுப்மன் கில்லை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். 14 வயது சின்னப் பையனை பார்த்தாவது சிறப்பாக பேட்டிங் ஆடுங்கள் என்று பலரும் பேசத் தொடங்கியுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு கம்பீரின் பரிசோதனை முயற்சிகளும், சுப்மன் கில்லும் காரணமாக அமைந்துள்ளனர். குறிப்பாக சுப்மன் கில் ஆசியக் கோப்பைத் தொடரில் இருந்து தொடர்ந்து 14 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

Vaibhav Suryavanshi

சுப்மன் கில்லுக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளை போல் ருதுராஜ், சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இந்திய அணி வழங்கவில்லை என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் சுப்மன் கில்லுக்கு இன்னொரு இளம் வீரர் மிகப்பெரிய தலைவலியை கொடுக்க தொடங்கி இருக்கிறார். அது வேறு யாரும் அல்ல.. 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி தான்.

யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகம் அணியை எதிர்த்து ஆடியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 56 பந்துகளில் சதம் விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 95 பந்துகளில் 14 சிக்ஸ், 9 பவுண்டரி விளாசி 171 ரன்களை விளாசி தள்ளினார். இதனால் இரட்டை சதம் விளாசும் வாய்ப்பு பறிபோனது. ஆனாலும் 14 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் பொளந்து கட்டி வருவது ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விரைவில் இந்திய சீனியர் அணிக்காக அறிமுகம் செய்யப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பார்த்த இந்திய அணி ரசிகர்கள் பலரும், சுப்மன் கில்லை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அந்த சின்னப் பையனை பார்த்தாவது சுப்மன் கில் கூடுதல் அதிரடியாக விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் சுப்மன் கில் விரைவில் இந்திய டி20 அணியில் இருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+