பங்காளி பாகிஸ்தான் அவுட்.. செமியில் நியூசிலாந்துடன் மோதும் இந்தியா.. இந்த 4 விஷயம் நடக்கலைன்னா! காலி
சென்னை: 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை செமி பைனலில் எதிர்கொள்ள உள்ளது. பாகிஸ்தான் செமி பைனலுக்கு வருவது கிட்டத்தட்ட இயலாத காரியம் ஆகிவிட்டது.
இதனால் செமி பைனல் இந்தியா நியூசிலாந்து இடையே நடக்க உள்ளது. நேற்று இலங்கை அணியை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்து செமி பைனல் இடம் உறுதியானது. நேற்று முதலில் இறங்கிய இலங்கை 46.4 ஓவரில் 171 ரன்கள் எடுத்தது.

அதை தொடர்ந்து இறங்கிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டை இழந்து வெறும் 23.2 ஓவரில் வென்றது. இதனால் பாகிஸ்தான் செமி பைனலுக்கு செல்வது கிட்டத்தட்ட இயலாத காரியம் ஆகிவிட்டது.
பாகிஸ்தானுக்கு வெற்றிபெற பின்வரும் வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.
ஸ்கோர் 300, இங்கிலாந்தை 13க்கு கட்டுப்படுத்த வேண்டும்.
ஸ்கோர் 400, இங்கிலாந்தை 112க்கு கட்டுப்படுத்த வேண்டும்.
.
ஸ்கோர் 450, இங்கிலாந்தை 162க்கு கட்டுப்படுத்த வேண்டும்.
.
ஸ்கோர் 500, இங்கிலாந்தை 211க்கு கட்டுப்படுத்த வேண்டும்.
.
செமி பைனல்: இந்த நிலையில் செமி பைனலில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்வது உறுதியாகி உள்ளது. நியூசிலாந்து வென்று செமி பைனல் வந்ததால் கிட்டத்தட்ட இந்த உலகக் கோப்பை 2019 உலகக் கோப்பை போல மாறிவிடும். அதில் செமி பைனலில் நாம் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்தோம். அது நடக்காமல் இருக்க பின்வரும் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
1. இந்தியா வெற்றி மிதப்பில் இருக்க கூடாது. வரிசையாக இந்தியா வென்றுவிட்டது. 8க்கு 8 போட்டிகளில் வென்றுவிட்டது. இந்திய அணியின் தொடர் வெற்றிகள் முக்கியமான ஆபத்து ஆகும். இதே மனநிலையோடு போனால் திடீர் தோல்விக்கு அது காரணம் ஆகும். ஏனென்றால் இந்திய வீரர்கள் என்று இல்லை தொடர் வெற்றிக்கு யாருக்குமே மிதப்பை கொடுக்கும். அந்த மிதப்பு காரணமாக வீரர்கள் சொதப்ப வாய்ப்பு உள்ளது. இந்த மனநிலையை ரோஹித்தான் மாற்ற வேண்டும். ஒரு தோல்வியாவது இருந்திருந்தால் பயம் வந்திருக்கும். ஆனால் அந்த பயம் இப்போது அணியில் இல்லை.
2.இந்திய அணி எப்போதுமே லீக் ஆட்டங்களில் நன்றாக ஆடி உள்ளது. ஆனால் செமி, பைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் தோனிக்கு பின்பாக எந்த கேப்டனும் சரியாக ஆடவில்லை. அந்த அழுத்தம் இப்போதும் இந்திய அணிக்கு இருக்கும். அதை சரி செய்ய இந்திய அணி கஷ்டப்பட வேண்டும். இதுவே பெரிய அழுத்தத்தை இந்திய வீரர்களுக்கு கொடுக்கும்.
3. அணியில் மிடில் ஆர்டரில் இன்னமும் ஒரு இடத்தில் பிரச்சனை உள்ளது. அது சூர்யா குமார் யாதவ் இடம். அங்கே இஷான் கிஷனை இறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.. அவர் இன்னும் முழுமையாக பார்மிற்கு திரும்பவில்லை.
4. ஓப்பனிங்கில் இன்னும் ரோஹித், கில் கொஞ்சம் பொறுமையாக ஆட வேண்டும். இனி நடக்கும் இக்கட்டான போட்டிகளில் கில் முழு பார்மிற்கு திரும்பியே ஆக வேண்டும். முக்கியமான நேரத்தில் இது போன்ற வீரர்களின் பார்ம்தான் மிக முக்கியம். இல்லையென்றால் ஓப்பனிங் இறங்க வேறு வீரரை ரோஹித் பிடிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications