செமி பைனல் போட்டியில் சூப்பர் ட்விஸ்ட்.. சட்டென கீழே போன பெரிய அணி.. அடித்து மேலே வரும் புது டீம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023 உலகக் கோப்பை தொடரில் செமி பைனல் செல்ல போகும் அணிகள் எது எது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த லிஸ்டில் தற்போது அதிரடி மாற்றங்கள் நடக்க தொடங்கி உள்ளன.

2023 உலகக் கோப்பை தொடரில் எதிர்பார்த்ததை விட கடந்த சில போட்டிகளாக ஆட்டம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது.

 What are the big teams that will lose semi-final chance in the 2023 World Cup Cricket

முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.

இந்தியா தொடர் வெற்றி: அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. இதன் மூலம் 6 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.

தென்னாபிரிக்கா அணி அதிரடி; இன்னொரு பக்கம் 7 போட்டிகளில் ஆடிய தென்னாபிரிக்க அணி இதுவரை 6 போட்டிகளில் வென்றுள்ளது. கடைசியாக நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் கூட தென்னாபிரிக்க அணி அதிரடியாக வென்றது. நெட் ரன் ரேட் +2.290என்று உச்சத்தில் உள்ள அந்த அணி இப்பத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நியூசிலாந்து அணி: இன்னொரு பக்கம் நியூசிலாந்து அணி நேற்று தென்னாபிரிக்கா அதற்கு முன் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. அதற்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வீழ்ந்தது.தொடக்கத்தில் நன்றாக ஆடிய நியூசிலாந்து தற்போது 3 தோல்விகளுடன் சரிந்து இறங்கு முகம் கண்டுள்ளது. 90 சதவிகிதமாக இருந்த அவர்களின் செமி பைனல் வாய்ப்பு தற்போது 60 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இன்னொரு பக்கம் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக 2 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கீழே இருந்த ஆஸ்திரேலியா அணி மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளது. மீண்டும் அந்த அணி கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்துள்ளது. அதன்பின் வரிசையாக எல்லா போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. அதன் வீரர்களும் பார்மிற்கு வந்துள்ளனர். இந்த ஆஸ்திரேலியா அணியின் வருகையால் 3 பெரிய அணியில் ஒரு அணி செமி பைனல் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

வாய்ப்பு என்ன?: செமி பைனலில் அணிகளுக்கு இருக்கும் வாய்ப்புகள் பின்வருமாறு:

இந்தியா - 99.9%.
தென்னாப்பிரிக்கா - 99.8%.
ஆஸ்திரேலியா - 75%.
நியூசிலாந்து - 60%.

ஆப்கானிஸ்தான் - 35%.
பாகிஸ்தான் - 15%.
இலங்கை - 8%.
நெதர்லாந்து - 7%.
இங்கிலாந்து - 0.3%.
பங்களாதேஷ் - ஏற்கனவே வெளியேறிவிட்டது.

இப்போது ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தானுக்கு செமி பைனல் செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. வரும் போட்டிகளில் இவர்கள் வெல்வதை வைத்தே இதை முடிவு செய்ய முடியும். முக்கியமாக நியூசிலாந்து வெளியேறினால் இந்த இரண்டு அணிகளில் ஒன்று செமி பைனல் செல்லும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+