உலகையே நிமிர வைத்த ஆப்கானிஸ்தான்.. அந்த போராட்ட குணம்.. கத்துக்குட்டி அணி கற்றுத்தந்த 6 பாடங்கள்
சென்னை: ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பையில் ஆடிய விதம் பலருக்கும் பாடமாக அமைந்துள்ளது. இதுவரை அவர்கள் ஆடிய ஆட்டம்.. வெற்றி தோல்வி எல்லாம் கிரிக்கெட்டில் மட்டுமல்ல கிரிக்கெட்டிற்கு வெளியேவும் 6 முக்கியமான விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை 2023 தொடரில் சிறப்பாக ஆடி உள்ளது. இந்த சீசனில் இன்னும் 2 போட்டிகளில் அந்த அணி ஆட வேண்டும். அதில் பெறும் வெற்றியை பொறுத்தே அவர்களின் செமி பைனல் வாய்ப்பு உள்ளது. நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தோற்ற நிலையில் அவர்களின் செமி பைனல் வாய்ப்பு குறைந்துள்ளது.

இந்த சீசனில் சிறப்பாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி சில முக்கியமான விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது.
1. ஆப்கானிஸ்தான் நேற்று தோல்வி அடைந்து இருந்தாலும் இந்த சீசனில் அவர்கள் ஆடிய விதம் மிகப்பெரிய அளவில் இருந்தது. கத்துக்குட்டி என்ற பெயருடன் உள்ளே வந்த அணி தங்களின் பலத்தை முறையாக பயன்படுத்தி, முறையான திட்டமிடலுடன் ஆடி.. சிங்கக்குட்டி என்பதை பல முறை நிரூபித்தனர். புள்ளிகள் பட்டியலில் இப்போதும் செமி பைனல் போட்டியில் அவர் இருக்க காரணம் இந்த முறையான ஆட்டமே. கிரிக்கெட்டிற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் இது பெரிய பாடம்தான்.
2. ஆப்கானிஸ்தானுக்கு அவர்களின் பலம் என்ன என்று தெரியும். அது ஸ்பின் பவுலிங். பொதுவாகவே இந்திய பிட்சில் ஸ்பின் பவுலிங் சிறப்பாக இருக்கும். இதை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். இதுதான் தங்களின் பலம் என்பதை உணர்ந்து அதை சரி செய்து கொண்ட விதம் ஆப்கானிஸ்தானுக்கு இந்த தொடரில் மாறி உள்ளது .
3. ஆப்கானிஸ்தானின் பலவீனமாக இருந்தது அவர்களின் பேட்டிங் ஆர்டர். அதையும் கூட இந்த தொடரில் அவர்கள் சரி செய்துள்ளனர். சர்தான், குர்பாஸ், ரஹ்மான் என்று எல்லோரும் இந்த சீசனில் தங்களின் சிறப்பான பேட்டிங்கை வெளிக்காட்டினர். அவர்கள் தங்களின் குறையை கலைந்த விதம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
4. அதே சமயம் ஆப்கானிஸ்தானின் ஓவர் கான்பிடென்ஸ் பலருக்கும் பாடமாக அமைந்தது. நேற்று 7 விக்கெட் எடுத்ததும் மேட்ச் ஓவர் என்பது போல அவர்கள் நடந்து கொண்ட விதம் ஒரு பக்கம் தவறாக இருந்தது. மேக்ஸ்வெல் விக்கெட்டை எடுக்க முயற்சி செய்யாமல் சும்மா வீசியது, அவர் ஓட முடியாமல் இருக்கும் போது ரன் அவுட் கூட செய்யாமல் இருந்தது என்று ஆப்கானிஸ்தானின் ஓவர் கான்பிடன்ஸ் அவர்களுக்கே எதிராக மாறியது.
5. எப்போதும் வாழ்க்கையிலும் சரி.. கிரிக்கெட்டிலும் சரி.. அனுபவம் ரொம்ப முக்கியம். வரிசையாக வென்ற ஆப்கானிஸ்தான் நேற்று மேக்ஸ்வெல் அடிக்க தொடங்கியதும் திணறினார்கள். அவர்களிடம் போதிய அனுபவம் இல்லை என்பதை இது காட்டுகிறது. அந்த அணியில் பெரும்பாலான வீரர்கள் 30 வயதிற்கும் குறைவானவர்கள். ரோஹித் , கோலி போல ஒரு சீனியர் இருந்திருந்தால் நேற்று மெக்ஸ்வெல் விக்கெட்டை எடுக்க ஆலோசனை வழங்கி இருப்பார்கள். அதுதான் நடக்காமல் போய்விட்டது.
6. பலருக்கும் வாழ்க்கையில் கஷ்டம் இருக்கும். அதை எல்லாம் மறந்துவிட்டு தங்கள் குறிக்கோளில் அவர்கள் எப்படி கவனம் செலுத்துகிறார்கள் என்பதே முக்கியம். அந்த வகையில்.. ஆப்கானிஸ்தான் அணியும் தாலிபான் ஆட்சி, ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் என்று பல விஷயங்கள் இருந்தும் கூட அதை எல்லாம் மறந்துவிட்டு.. முழுக்க முழுக்க தங்களின் ஆட்டம் மீது கவனம் செலுத்தினர். அதுதான் அவர்களின் ஆட்டம் மெருகேற மிக முக்கிய காரணமாக அமைந்தது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications