அடேங்கப்பா! "கிங்" கோலியிடம் கொட்டி கிடக்கும் சொத்து.! ஓய்வில் இருந்தாலும் கொட்டும் வருமானம்
டெல்லி: இந்தியாவின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் போட்டியில் உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. கடைசியாக இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக லண்டனில் போட்டியிட்டது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வில் இருக்கும் நிலையில், அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத உள்ளது.

கோலி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் டாப் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக விராட் கோலி இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் இப்போது அதிக பாலோயர்ஸ்களை கொண்ட வீரர்களில் ஒருவராகக் கோலி உள்ளார். இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும் அவருக்கு 252 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர். இதற்கிடையே கோலியின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோலியின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ. 1,050 கோடியாக உள்ளதாக ஸ்டாக் குரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 34 வயதான கோலிக்கு இப்போது பல்வேறு வழிகளில் வருமானம் கிடைக்கிறது. கோலி இப்போது பிசிசிஐ ஒப்பந்தத்தில் "A+" பிரிவில் உள்ளார். இதில் இருந்து அவருக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் கிடைக்கிறது. இதுபோக போட்டி கட்டணமாக ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது.
முதலீடுகள்: இது தவிர ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி உடனான ஒப்பந்தம் மூலம் அவருக்கு ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் ஊதியமாகக் கிடைக்கிறது. கிரிக்கெட் போட்டியைத் தவிர மற்ற வழிகளிலும் அவருக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. கிரிக்கெட்டில் இருந்து தள்ளி ஓய்வில் இருந்தாலும் மற்ற வழிகளில் அவருக்கு வருமானம் கொட்டவே செய்கிறது.
இது மட்டுமின்றி அவர் பல பிராண்டுகளை வைத்துள்ளார். மேலும் ப்ளூ ட்ரைப், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ், எம்பிஎல் மற்றும் ஸ்போர்ட்ஸ் கான்வோ உள்ளிட்ட ஏழு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் அவர் முதலீடுகளையும் செய்துள்ளார். இதைத் தாண்டி கோலிக்கு விளம்பரங்களில் இருந்தே அதிக வருமானம் கிடைக்கிறது. அவர் 18க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக இருக்கிறார்.
இப்போது ஒரு விளம்பர ஷூட்டிங்கிற்கு அவர் ரூ.7.50 முதல் 10 கோடி வரை கட்டணம் வசூலிக்கிறார். இந்தியாவில் விளம்பரங்களில் அதிக ஊதியம் பெறுவோரில் கோலியும் ஒருவர். இப்படி விளம்பரங்களில் இருந்து மட்டும் அவருக்கு சுமார் ரூ.175 கோடி சம்பாதிக்கிறார்.
ஒட்டுமொத்த சொத்து மதிப்பு: சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு விளம்பர இன்ஸ்டாகிராம் போஸ்டிற்கு ரூ.8.9 கோடியும் ட்விட்டரில் ஒரு போஸ்டிற்கு ரூ.2.5 கோடி கட்டணமாக வசூலிக்கிறார். மேலும், கோலிக்கு மும்பை (ரூ. 34 கோடி) மற்றும் குருகிராம் (ரூ. 80 கோடி) என இரண்டு இடங்களில் சுமார் ரூ. 120 கோடி மதிப்பிலான வீடுகள் உள்ளன.இது மட்டுமின்றி அவரிடம் ரூ. 31 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களும் உள்ளன.
இவை தவிர, இந்தியன் சூப்பர் லீக்கில் போட்டியிடும் எஃப்சி கோவா கால்பந்து கிளப், ஒரு டென்னிஸ் அணி மற்றும் ஒரு மல்யுத்த அணியையும் அவர் சொந்தமாக வைத்துள்ளார். இப்படி ஒட்டுமொத்தமாக அவரது சொத்து மதிப்பு ரூ. 1,050 கோடியாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தற்போது பிரேக்கில் உள்ள கிங் கோலி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications