"நான்தான் அடிக்கிறேன்ல" விராட் கோலி அவுட்டாகியபோது கோபத்தில் கேஎல் ராகுல் சொன்னது என்ன?
துபாய்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் எதிர்முனையில் நின்றிருந்த கேஎல் ராகுல், திடீரென கொந்தளிக்கும் வகையில் சில வார்த்தைகளை பேசினார். அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டம் துபாய் மண்ணில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 98 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 84 ரன்களை விளாசி அசத்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, தேவையில்லாத ஷாட் விளையாடி ஆட்டமிழந்தார்.

இருப்பினும் கேஎல் ராகுல் கடைசி வரை களத்தில் இருந்து அபார சிக்சருடன் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இதனிடையே விராட் கோலி சிக்ஸ் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். அப்போது கேஎல் ராகுலை பார்த்து கொண்டே பெவிலியனை நோக்கி நடந்து சென்றார். இதற்கு மத்தியில், விராட் கோலியிடம் கேஎல் ராகுல் சில வார்த்தைகளை இந்தியில் கூறினார்.
இதனால் விராட் கோலியிடம் என்ன வார்த்தைகளை கேஎல் ராகுல் பேசினார் என்பது குறித்து ரசிகர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் கேஎல் ராகுல் இந்தியில், "Main maar raha tha naa" என்ற வார்த்தைகளை கூறி இருக்கிறார். அப்படியென்றால், "நான் தான் அடித்து கொண்டிருக்கிறேன்ல" என்று அர்த்தமாகும். இதனால் கேஎல் ராகுலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஏனென்றால் விராட் கோலி சிக்ஸ் அடிக்க முயற்சிப்பதற்கு முன்பாகதான் கேஎல் ராகுல் ஒரு சிக்ஸ், பவுண்டரியை விளாசி தள்ளினார். இதனால் ரன் ரேட்டும் இந்திய வீரர்களின் கட்டுக்குள் இருந்தது. இருப்பினும் விரைவாக ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கில், விராட் கோலி சிக்ஸ் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஏற்கனவே அதிகளவு சிங்கிளாக ஓடி விராட் கோலியின் எனர்ஜி குறைந்திருந்தது. அந்த நேரத்தில் அவர் சிக்ஸ் அடிக்க முயற்சித்ததால் பந்து எதிர்பார்த்த தூரம் செல்லாமல், நேராக ஜாம்பா கைகளில் சென்று விழுந்தது. இல்லையென்றால் ரசிகர்கள் நேற்றே விராட் கோலியின் 83வது சதத்தை பார்த்திருக்க முடியும்.












Click it and Unblock the Notifications