Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டை கூட தைக்க முடியாது.. பெங்களூர்ல இது சிக்சாம்.. ஆமா டேய் பச்ச சட்ட.. ஆர்ஜே பாலாஜி அதகளம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 57 மீட்டர் துணி, முழுக் கை சட்டை தைக்கவே போதாது, ஆனால் பெங்களூர் சின்னசாமி கிரவுண்டில் அவ்வளவு தூரம் அடித்தால் சிக்சர் கொடுக்கிறார்கள் என்று போகிற போக்கில் ஒரு கமெண்ட்டை ஆர்.ஜே.பாலாஜி அடித்துச் செல்ல, அருகே உட்கார்ந்திருந்த வர்ணனையாளர் "கொல்லென" சிரித்தபோதிலும், பாலாஜி சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தமிழ் வர்ணனையுடன் கேட்பதே தனி சுகம்தான். அதிலும் ஆர்.ஜே.பாலாஜி, முத்து, ரமேஷ், ஸ்ரீகாந்த் போன்றோர் பேசும்போது இந்தியாவிற்கு ஒரு விக்கெட் விழுந்தால் கூட கவலை மறந்து சிரித்துவிடும் அபாயம் உள்ளது.

When RJ Balaji is doing commentary in Star sports during cricket world cup laughter is guaranty

இதில் ஆர்.ஜே.பாலாஜிதான் உச்சகட்டம். தனக்கே உரித்தான பாணியில் எந்த சூழ்நிலையையும் மறந்து சிரிக்க வைத்துவிடுவார். எனவே அவர் பேசும்போது மட்டும் தமிழ் கமெண்டரி கேட்க கூட்டம் அள்ளுகிறது. இதில் நேர் எதிர், ஹேமங் பதானி. அவர் பேச ஆரம்பித்தால் காதுகளை மூடிக்கொண்டே, ரிமோட் நோக்கி கை ஓடுகிறது. சேனலை மாற்றுவதற்கு.

ஆர்.ஜே.பாலாஜி எல்லா சூழ்நிலையையும் நகைச்சுவையாகவே கையாளுவார். ரிஷப் பந்த் என்பதை கூட, ரிஷப் பந்தன் என்று பெயரை மாற்றி கலகலப்பூட்டுவது அவரது வாடிக்கை. இப்படித்தான் இன்று, வார்னர் கொடுத்த ஈஸி கேட்சை பாகிஸ்தான் வீரர் கோட்டை விட்டார். பந்தை பார்த்து கையை வைத்துக்கொண்டிருந்தபோதிலும் பந்து கையில் கூட படவில்லை. நெஞ்சில் பட்டு கீழே விழுந்தது. இதுபோல சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு மட்டமான ஃபீல்டிங்கை பார்ப்பது அபூர்வம். சட்டென பார்க்கும் நமக்கே கோபம் வரும் அளவுக்கு கர்ண கொடூரமான ஃபீல்டிங். பிபி நமக்கு ஏறிக்கொண்டிருந்தபோது சிரித்தபடியே பாலாஜி ஒரு தமிழ் சினிமா பாட்டை சிட்சுவேஷனுக்கு ஏற்ப எடுத்துவிட சட்டென பார்த்தவர்களுக்கு உடல் உஷ்ணம் கம்மியாகிவிட்டது. "நெஞ்சில் தீ வைத்து.." எனத் தொடங்கும் பாடலை அவர் பாடியதும் நெஞ்சை காட்டியபடி பந்தை வாங்கிய பாகிஸ்தான் வீரரை பார்த்து கோபத்திற்கு பதில் சிரிப்புதான் வந்தது.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரீஷ் ராஃப் சுமார் 146 கி.மீ வேகத்தில் வீசிய பந்தை அசால்டாக வார்னர் லெக் சைடில் தட்ட அது சிக்சரே போய்விட்டது. சிக்சரின் தூரம் வெறும் 57 மீட்டராம். உடனே பாலாஜி எடுத்துவிட்டார் பாருங்க.. ஏம்ப்பா 57 மீட்டரில் துணி வாங்குனா முழுக் கை சட்டையே தைக்க முடியாது. இது என்னப்பா பெங்களூர் கிரவுண்ட்ல சிக்சே போகுது என அவர் கூற, லாஜிக் இருக்கா, இல்லையா என யோசிக்கும் முன்பாக நமக்கு சிரிப்பு வந்துவிடுவது என்னவோ உறுதி.

எந்த சிட்சுவேஷனுக்கு தக்க ஒரு தமிழ் சினிமா பாட்டை எடுத்து சட்டென டைமிங்கில் அடிப்பது, விக்கெட் விழாத நேரத்தில் எதிரணியை வீழ்த்த விஷேஷ வார்த்தைகளால் மந்திரம் போடுவது, ஹலோ பச்ச சட்ட, மஞ்ச சட்ட என அழைப்பது என ஆர்ஜே பாலாஜி கமெண்டரி ஒரு திருவிழா போல போய்க்கொண்டுள்ளது.

இதெல்லாம் சின்ன சாம்பிள்தான். பாலாஜி பேசும்போது இனி கமெண்டரியை மட்டும் மிஸ் பண்ணிறாதீங்க. ஒரு முழு நீளக் காமெடி பட டயலாக்கை காதில் கேட்டபடியே, ஒரு கிரிக்கெட் போட்டியையும் பார்த்தால் என்ன உணர்வு கிடைக்குமோ அது ஒரே நேரத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனையில் கிடைப்பது உறுதி. ஆனால் ஒரு எச்சரிக்கை- ஹேமங்க் பதானி கமெண்டரியில் இருக்கிறாரா என நன்கு உறுதி செய்துவிட்டு கேட்க ஆரம்பிப்பது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நலன் விளைவிக்கும். அல்லது, அது வந்துங்க.. அது போய்ங்க.. சூப்பர் ஷாட்டுங்க.. கவ்லை படாதீங்க.. சாப்டு முக்கியம்ங்க.. இப்படி தமிழை கடித்து குதறி நமக்கு வெறியேற்றிவிடுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+