Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் சிஎஸ்கே மேட்ச் பார்க்க போறீங்களா.. இந்த கேலரியில் இருந்து பாருங்க.. சூப்பரா இருக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், டிக்கெட் விற்பனை ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் சென்று போட்டிகளை பார்க்க விரும்பும் ரசிகர்கள், எந்த கேலரியில் இருந்து ஆட்டத்தை பார்த்தால் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளது. ஏற்கனவே அனைத்து அணிகள் தரப்பில் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மறுபக்கம் விளம்பரப் பணிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மெகா ஏலத்திற்கு பின் புதிய வீரர்கள் பலரும் அணிகளில் இணைந்திருப்பதால், அவர்களை புரிந்து கொள்வதற்காக அணி நிர்வாகங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறது.

ipl 2025 Chepauk Stadium csk 2025

அந்த வகையில் சிஎஸ்கே அணி இம்முறை ராகுல் திரிப்பாட்டி, தீபக் ஹூடா, நூர் அஹ்மத், கலீர் அஹ்மத் என்று ஏராளமான புதிய வீரர்களை வாங்கி இருக்கிறது. பிப்ரவரி கடைசி வாரத்திலேயே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தோனி உட்பட அனைவரும் சிஎஸ்கே பயிற்சி முகாமிற்கு வந்து சேர்ந்தனர். இன்னும் ஓரிரு நாட்களில் ஜடேஜாவும் இணைந்துவிடுவார்.

சிஎஸ்கே ஜாம்பவான் தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. அதற்கேற்ப அவர் தனது டீ-ஷர்ட்டிலும் சில குறியீடுகளை வெளியிட்டிருந்தார். இதனால் தோனியின் ஆட்டத்தை நேரில் பார்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தீவிரமாக உள்ளனர். வழக்கம் போல் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என்று கண்கொத்தி பாம்பாக பார்த்து வருகின்றனர்.

இம்முறை ஆன்லைன் செயலி மூலமாக டிக்கெட் விற்பனை நடக்கவுள்ளது. அந்த வகையில் மைதானத்திற்கு சென்று சிஎஸ்கே போட்டிகளை பார்க்க விரும்பும் ரசிகர்கள் முக்கிய ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது சிஎஸ்கே அணி மொத்தமாக 7 போட்டிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் ஆடவுள்ளது. அதில் மார்ச் 23ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடுகிறது.

இந்த போட்டிக்கு டிக்கெட் புக் செய்ய விரும்பும் ரசிகர்கள், மைதானத்தில் அற்புதமான அனுபவத்தை பெறுவதற்கு 2 கேலரியில் இருந்து போட்டிகளை பார்க்க வேண்டும். மைதானத்தின் மற்ற பகுதிகளை விடவும் இந்த 2 அரங்கில் இருந்து பார்த்தால் மட்டுமே, போட்டியின் சின்ன சின்ன அசைவுகளை முழுமையாக கண்காணிக்க முடியும்.

அது எந்த கேலரி என்றால் சி மற்றும் ஈ. மொத்தமாக சி, டி, ஈ ஆகிய 3 ஸ்டாண்டுகளும் ஒன்றாக இருக்கும். இதில் சி ஸ்டாண்டில் இருந்து ஆட்டத்தை பார்த்தால், லாங் ஆன் திசையில் இருந்து ஆட்டத்தை பார்க்க முடியும். அதேபோல் ஓவர்கள் மாறும் போது, பாய்ண்ட் திசையில் இருந்து ஆட்டத்தை பார்க்க முடியும். அதேபோல் ஈ ஸ்டாண்டில் இருந்து பார்த்தால், கவர்ஸ் திசையில் இருந்து ஆட்டத்தை கண்டு ரசிக்கலாம்.

மாலை நேரத்தில் கவர்ஸ் திசையில் இருந்து பார்க்கும் போது, சேப்பாக்கம் மைதானத்தின் ஒவ்வொரு அசைவையும் எளிதாக காண முடியும். அதேபோல் கீழ் இருந்து மேல் நோக்கி 15 வரிசைகளுக்கு மேல் டிக்கெட் பெற்றால், அந்த அனுபவம் நிச்சயம் அற்புதமானதாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்டாண்ட் அருகில்தான் வீரர்களின் ஓய்வறை மற்றும் டிஜே உள்ளிட்டோரும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+