விவாகரத்தான ஒரே மாதம்.. துபாயில் சாஹலுக்கு பக்கத்தில் இருந்த பெண் யார்? அட இந்த பிரபலமா!
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் போது இந்திய நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுடன் அமர்ந்து போட்டியை பார்த்த பெண் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூட்யூபர் என்பது தெரிய வந்துள்ளது. இருவரும் கடந்த டிசம்பர் மாதம் முதலே பழகி வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ரூ.18 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே ஸ்பின்னர் ஒருவர் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரருக்கு சிறந்த மதிப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும் பார்க்கப்பட்டது.

இதனிடையே சில வாரங்களுக்கு முன்பாக கிரிக்கெட் வீரர் சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா தம்பதியினர் விவாகரத்து பெற்று கொண்டனர். கடந்த 18 மாதங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாகவும் கூறப்பட்டது. இதனால் மாடலான தனஸ்ரீ மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.
சாஹலின் புகழை பயன்படுத்தி தனஸ்ரீ புகழை ஈட்டிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் எந்த விமர்சனத்திற்கும் தனஸ்ரீ இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியை பார்க்க சாஹல் நேரில் வந்திருந்தார். அப்போது அவருடன் பெண் ஒருவரும் இருந்தது ரசிகர்களிடையே விவாத பொருளாக மாறியுள்ளது.
இதனால் சாஹலுடன் இருந்த பெண் யார் என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர். இந்த நிலையில் சாஹலுடன் இருந்த பெண் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் உத்தப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூட்யூபரான ஆர்ஜே மஹ்வாஷ் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது சாஹல், அவருடன் இருந்த புகைப்படங்கள் வெளியாகி சந்தேகங்களை ஏற்படுத்தியது.
யூட்யூப் ஸ்டாரான ஆர்ஜே மஹ்வாஷ், ஏராளமான பிராங்க் வீடியோக்களை செய்து பிரபலமானவர். இவருக்கென்று தனித்துவமான ரசிகர்களும் உள்ளனர். டெல்லியில் மாஸ் கம்யூனிகேசன் படித்த அவர், ஆர்ஜே-வாக பணியை தொடங்கினார். இதன் மூலமாக பிரபலமடைந்த அவருக்கு பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், அதனை அவர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications