கதையில் ட்விஸ்ட்.. சாஹலுக்கு வேறு ஒரு கேர்ள் பிரண்ட் இருக்கா? இது என்ன புதுசா இருக்கே! ஷாக் போட்டோ
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கிரிக்கெட் உலகத்திலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
இருவரும் சமூக வலைத்தளங்களில் unfollow செய்துவிட்டனர். அதோடு இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை டெலிட் செய்துவிட்டனர். இதனால் விரைவில் இருவரும் விவாகரத்து செய்யக்கூடும் என்று தகவல்கள் வர தொடங்கி உள்ளன.

இந்த செய்திகள், விவாதங்களுக்கு இடையில், அடையாளம் தெரியாத பெண்ணுடன் சாஹல் இருக்கும் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது. இணையத்தில் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கடந்த வருடமே தனஸ்ரீ வர்மா தனது பெயருக்கு பின் இருந்த சாஹல் என்ற பெயரை நீக்கிவிட்டார். சமூக வலைத்தளங்களில் நீக்கி பெயரை மாற்றிவிட்டார். அப்போதே இந்த பிரச்சனை கவனிக்கப்பட்டது. கடந்த ஐபிஎல் தொடரை பார்ப்பதற்கும் கூட அவர் வரவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் ஹோட்டல் ஒன்றில் இருந்து சாஹல் பெண் ஒருவருடன் வெளியே வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பெண் ஒருவருடன் முகத்தை மூடியபடி வந்த சாஹல்.. காரில் ஏறும் காட்சிகள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
அந்த மர்ம பெண் யார்.. சஹாலுக்கு அவர் என்ன உறவு என்ற விவரங்கள் வெளியாகவில்லை. அவர் சாஹலின் புது கேர்ள் பிரண்ட் என்று கூறி நெட்டிசன்கள் விமர்சனம் வைத்து வருகின்றனர்.
சாஹல் தனஸ்ரீ மோதல்:
ஏற்கனவே தனஸ்ரீ வர்மா தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படம்தான் சாஹல் - தனஸ்ரீ வர்மா இடையிலான விவாகரத்திற்கு முக்கியமான காரணமாக மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தனஸ்ரீ வர்மா குறித்த வதந்திகளுக்கு வலு சேர்க்கும் வகையில் நடன இயக்குனர் பிரதிக் உடேகருடன் தனஸ்ரீ இருக்கும் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
படத்தில் இருவரும் ஒரே மாதிரி கருப்பு நிற உடை அணிந்து உள்ளனர். இருவரும் இரவு பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளனர். கட்டி அணைத்தபடி இருவரும் புகைப்படம் எடுத்த நிலையில் அது வைரலாகி வருகிறது.

பிரதிக் உடேகர் யார்?:
மும்பையைச் சேர்ந்த பிரதிக் உடேகர், டான்ஸ் மாஸ்டர் ஆவார். இவர் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தவர்.
சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித் மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட பாலிவுட்டின் பல பிரபலங்களுடன் பணிகளை செய்துள்ளார். டிவி சேனல்களில் மிகவும் பிரபலமாக இருக்க கூடியவர். கரண் ஜோஹர் மற்றும் மௌனி ராய் போன்ற நன்கு அறியப்பட்ட நபர்களுக்கு இவர் நெருக்கம்.
அவருடன் சேர்ந்துதான் தனஸ்ரீ வர்மா பணியாற்றி வருகிறார். இருவரும் ஒரே டான்ஸ் பயிற்சி மையத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த நிலையில்தான் இவர்களுக்கு இடையிலான நெருக்கம் தனஸ்ரீ வர்மா- சாஹல் பிரிவிற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பல புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.அதன்படி சாஹல் - தனஸ்ரீ இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்யப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன.
நேற்று சாஹல் வைத்த இன்ஸ்ட்டா ஸ்டோரி ஒன்றில்.. நான் கடினமாக உழைத்தேன். என் கடின உழைப்பு மூலமே நான் இந்த இடத்திற்கு வந்தேன். நான் அப்பா - அம்மாவிற்கு நல்ல மகனாக இருந்தேன். அப்படியே எப்போதும் இருப்பேன் என்பதாக ஒரு போஸ்ட் செய்து இருந்தார். அவரின் இந்த போஸ்ட் விவாகரத்தை முன்னிட்டு செய்த போஸ்ட்டாக கருதப்படுகிறது.
இதில் தனஸ்ரீ மீது சில கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. தனஸ்ரீ தனது கணவரை ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை. அவரை தூக்கி சுற்றுவது.. நண்பர்கள் முன் அவமதிப்பது போல பேசுவது என்று தனஸ்ரீ மிக மோசமாக நடந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications