எவ்வளவோ துறை இருக்க.. தோனி ஸ்ட்ராபெரி விவசாயம் செய்வது ஏன்? அப்படி என்ன காரணம்?
சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஸ்ட்ராபெரி விவசாயம் செய்ய என்ன காரணம் என்ற விவாதம், கேள்விகள் இணையம் முழுக்க எழுந்துள்ளது.
2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. துபாயில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வீரர்கள் அணிகளுக்கு இடையே மாற வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐபிஎல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஐபிஎல் கேப்டன்கள் எல்லோரும் இதில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் நிலையில் தோனி மட்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமைந்துள்ள தோனியின் 'ஈஜா' பண்ணையானது 43 ஏக்கரில் ஸ்ட்ராபெரி, கேப்சிகம், டிராகன் பழம், தர்பூசணி, முலாம்பழம், பட்டாணி மற்றும் மற்றொரு காய்கறிகளுடன் தற்போது பண்ணையில் பயிரிடப்பட்டு வருகிறது.
ஸ்ட்ராபெரி இங்கே அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. எல்லா கிரிக்கெட்டர்களும் கிரிக்கெட் பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டு இருக்க தோனி மட்டும் ஸ்ட்ராபெரி விவசாயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஸ்ட்ராபெரி விவசாயி ஒருவர் கிரிக்கெட் பற்றி யோசிக்காமல் இருக்கிறார்.. ஆனால் அடுத்த வருடம் இவர்தான் கப் அடிப்பார் என்று நெட்டிசன்கள் பலரும் கூட கூறி வருகின்றனர். ஸ்ட்ராபெரி விவசாயத்தை தோனி மேற்கொள்ள முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது.
ஸ்ட்ராபெரி முக்கியத்துவம்: 2022 ஆம் ஆண்டில், இந்திய ஸ்ட்ராபெரி சந்தை 252% அதிகரித்து உள்ளது. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இதன் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. முக்கியமாக ஸ்ட்ராபெரி நுகர்வு குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பை சந்தித்துள்ளது. இதன் விலை ஒரு கிலோ ரூபாய் 200க்கு கடந்த 3 வருடங்களுக்கு முன் விற்பனை ஆனது.
தற்போது இதன் விலை ஒரு கிலோ ரூபாய் 250க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் ஸ்ட்ராபெரி வரத்து குறைவாக உள்ள நேரங்களில் இதன் விலை 300 ரூபாய் அளவிற்கு கிலோவிற்கு செல்கிறது.
பொதுவாக ஸ்ட்ராபெர்ரிகள் சோடியம் இல்லாத, கொழுப்பு இல்லாத, கொலஸ்ட்ரால் இல்லாத, குறைந்த கலோரி உணவு மற்றும் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் ஒரு சக்திவாய்ந்த பழமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே ஸ்ட்ராபெரி சந்தை அளவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
ஸ்ட்ராபெரி மீதான ஆர்வம், தேவை இதனால் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்.. வடஇந்தியாவில் பல பயிர்கள் இருக்கும் நிலையில் தோனி ஸ்ட்ராபெரி விளைவிக்க இதுவே காரணம் என்று கூறப்படுகிறது. அதோடு இவருக்கு தனிப்பட்ட வகையில் ஸ்ட்ராபெரிதான் மிகவும் பிடித்த பழம். இதன் மீதுள்ள விருப்பம் காரணமாகவே அவர் ஸ்ட்ராபெரி விற்பதாக கூறப்படுகிறது. அதோடு இல்லாமல் பொருளாதார ரீதியாக ஸ்ட்ராபெரியை இந்தியாவில் பெரிய மார்க்கெட் செய்யும் திட்டம் இவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் லிஸ்ட்: இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக வீரர்களை "ரிடென்ஷன்" செய்யும் லிஸ்ட் சமீபத்தில் வெளியானது.
டெல்லி அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரிஷப் பந்த், பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஓஸ்ட்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி என்கிடி, லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ்ம், இஷாந்த் குமார் ஷர்மா, யகேஷ் துஷ் ஷர்மா, . வெளியிடப்பட்ட வீரர்கள்: ரிலீ ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க்.

ராஜஸ்தான் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன் (சி), ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டொனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சால்ட் , ஆடம் ஜம்பா. விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வஷிஷ்ட், குல்தீப் யாதவ், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி. கரியப்பா, கே.எம்.ஆசிப். டிரேட் செய்யப்பட்ட வீரர்: அவேஷ் கான்
சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: MS தோனி (கேப்டன் & wk), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜின், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா. வெளியிடப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications