கோலி கூட "கிராம்ப்ஸ்" வந்து திணறிய போதும்.. மிட்சல் அசால்ட்டாக ஆடியது எப்படி? அதிர வைக்கும் சீக்ரெட்
சென்னை: நேற்று நியூசிலாந்து இந்தியா இடையிலான ஆட்டத்தில் பல பேர் தசை பிடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டும் கூட ஒரு வீரர் பாதிக்கப்படவில்லை. அவர் டெர்லி மிட்சல் . அது எப்படி சாத்தியம் ஆனது?
2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செமி பைனலில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக.. அந்த காயங்களுக்கு மருந்து போடும் விதமாக இந்த போட்டியில் நேற்று இந்திய அணி வென்றுள்ளது.

தடை பிடிப்பு பிரச்சனை: நேற்று மேட்ச் நடந்த வான்கடே பிட்சில் ஏற்கனவே நீண்ட நேரம் ஆடிய வீரர்களுக்கு கிராம்ப்ஸ் வந்து இருக்கிறது. அதாவது தசை பிடிப்பு. உதாரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நீண்ட நேரம் ஆடிய மேக்ஸ்வெல் கிராம்ப்ஸ் காரணமாக பாதிக்கப்பட்டார். அவருக்கு தசை பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் ஆட முடியாமல் தவித்தார்.
நேற்றும் கூட இந்திய அணியில் சுப்மான் கில் இதேபோல் கிராம்ப்ஸ் மூலம் பாதிக்கப்பட்டார். 70 ரன்கள் கடந்த நிலையில் அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால் நடக்க முடியாமல் சிரமப்பட்டார். இதையடுத்து அவர் உடனே பெவிலியன் திரும்பினார். அதே காலோடு ஆடினால் அது காயத்திற்கு கூட வழி வகுக்கும்.
கோலி கூட பாதிப்பு: இன்னொரு பக்கம் நேற்று கோலியும் கூட ஆடும் போதே தசை பிடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டார் . 90 ரன்களை கடந்து ஆடிய போது அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவரும் கூட ஓட முடியாமல் சிரமப்பட்டார். ஆனால் அவரின் பிட்னஸ் வேறு வகை. அவர் இதற்கு எல்லாம் ஏற்கனேவே பயிற்சி எடுத்தவர். இதன் காரணமாகவே அவருக்கு காயங்கள் ஏற்படுவது இல்லை.
இதனால்தான் நேற்று அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டும் கூட அதை பொறுத்துக்கொண்டு தொடர்ந்து களத்தில் நின்று ஆடினார் .
என்ன காரணம் ?: மும்பை வான்கடே மைதானம் கடலுக்கு அருகில் உள்ளது. இங்கே பேட்டிங் இரண்டாம் இன்னிங்ஸ் இறங்குவது கடினம். காரணம் கடும் சூடு இருக்கும். புழுக்கம் இருக்கும். இதனால் நீர் சத்து வெளியேறும்.
இதன் காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு தசை பிடிப்பு ஏற்படும். உடல் வியர்வை காரணமாக உடனே தசை பிடிப்பு ஏற்படும். பலரும் இதனால் தசை பிடிப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டதுண்டு.
டெர்லி மிட்சல் தப்பித்தது எப்படி?: நேற்று இத்தனை பேர் தசை பிடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டும் கூட ஒரு வீரர் பாதிக்கப்படவில்லை. அவர் டெர்லி மிட்சல் . அவர்தான் நீண்ட நேரம் களத்தில் இருந்தார். முதல் இன்னிங்ஸ் பீல்டிங் செய்துவிட்டு அதன்பின் அவர் பேட்டிங்கிற்காக இறங்கினார்.
கிட்டத்தட்ட 40 ஓவர்கள் அவர் மேட்சில் இருந்தார். 119 பந்துகள் பிடித்த அவர் 134 ரன்கள் எடுத்தார். 9 பவுண்டரி, 7 சிக்ஸர் அடித்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் அவர் மைதானத்தில் இருந்தார். ஆனாலும் இவருக்கு தசை பிடிப்பு ஏற்படவில்லை.
இதற்கு காரணம் உள்ளது. மிட்செல் நியூசிலாந்தில் கிரிக்கெட் போட்டி இல்லாத சமயங்களில் ரக்பி அணிக்கு வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளராக இருந்தார். அதாவது ரக்பி ஆட கடுமையான உடல் வலிமை வேண்டும். அங்கே கிரிக்கெட்டை விட 3 மடங்கு அதிக பலம் தேவை. அதேபோல் கடுமையாக ஓடும் திறன், வலிமை வேண்டும். இதற்கு பயிற்சி கொடுத்தவர்தான் மிட்செல்.
அவரது உடற்தகுதி மற்றும் எதிர்தன்மையை நேற்று மேட்சில் பலரும் பார்த்து இருக்கலாம். நேற்று அந்த சூட்டில் 50 ஓவர்கள் பீல்டிங் செய்தார். மேலும் தற்போது 30 ஓவர்களுக்கும் மேலாக பேட்டிங் செய்தார். இதற்கு காரணம் அவரின் பழைய ரக்பி பயிற்சி யுக்திதான்.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications