மேட்சுக்கு நடுவே.. அப்படியே ஸ்டன் ஆகி.. சிலையாக நின்ற கோலி.. மிரண்ட மைதானம்.. என்ன நடந்தது?
சென்னை; இந்தியா இலங்கைக்கு எதிராக ஆட்டத்தில் கோலி கொடுத்த ரியாக்சன் ஒன்று இணையம் முழுக்க கவனம் பெற்று வருகிறது.
இந்தியா இலங்கை இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் இன்றி ஆடி வருகின்றனர். இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே.), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் ஆடி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் இலங்கை அணியில் பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், துஷான் ஹேமந்த, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் ஆடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்து ஆடி வருகிறது.

கடந்த இரண்டு போட்டிகளாக சிறப்பாக ஆடிய ரோஹித்சர்மா வெறும் 2 பந்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து இறங்கிய கோலி, ரோஹித் சர்மா இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார்.
தேவையான நேரங்களில் பவுண்டரி, சிக்ஸ் என்று மாறி மாறி அடித்தனர். ஸ்கொயர் லெக்கில் தொடர்ந்து கில் அதிரடியாக ஆடினார். அதேபோல் இந்த போட்டியிலும் கவர் டிரைவ் மூலம் கோலி இலங்கை அணிக்கு பிரஷர் போட்டார்.
( செமி பைனல் போட்டியில் சூப்பர் ட்விஸ்ட்.. சட்டென கீழே போன பெரிய அணி.. அடித்து மேலே வரும் புது டீம் )
கோலி அதிரடி: முக்கியமாக கில் அதிரடியாக ஆடி தொடக்கத்தில் இருந்தே 92 பந்தில் 92 ரன்கள் எடுத்தார். 11 பவுண்டரிகளை அடித்து இலங்கை பவுலர்களை இவர் திணறடித்தார் . அதேபோல் 2 சிக்ஸர்களை அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் தேவையில்லாமல் அப்பர் கட் அடிக்க முயன்று தில்ஷன் பந்தில் அவுட் ஆனார்.
முன்னதாக கில் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது.. அவர் அடித்த ஒரு பவுண்டரி அதிகம் கவனம் பெற்றது. முக்கியமாக் பார்வேர்ட் ஷார்ட் லெக் திசையில் பீல்டருக்கு இடையில் அவர் பந்தை அடித்தார். கேட்ச் சான்ஸ் அதிகம் இருந்தும் பந்து இடையில் புகுந்து சென்றது.
இதை பார்த்ததும் அப்படியே ஷாக் ஆகி.. கோலி ஓ என்பது போல முகத்தை வைத்துக்கொண்டு பார்த்தார். ஓ என்று அதிசயமாக முகத்தை வைத்துக்கொண்டு அவர் பார்த்தார்.

கோலி அதிரடி பேட்டிங்; இன்னொரு பக்கம் கோலி அதிரடியாக ஆடி இதேபோல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 94 பந்துகள் பிடித்த அவர் 88 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தில்ஷன் பந்தில் இவரும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இந்தியா முன்னேற்றம்: கடந்த சில போட்டிகளாக ஆட்டம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.
அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. இதன் மூலம் 6 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.












Click it and Unblock the Notifications