இதுதாங்க ஆஸ்திரேலியா.. உலகக் கோப்பையை வென்றுவிட்டு.. நாடு திரும்பிய கம்மின்ஸுக்கு நேர்ந்த கதி.. பச்
சென்னை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் நேற்று நாடு திரும்பினார். சிட்னி சென்ற அவருக்கு நேர்ந்த சம்பவம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
2023 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. வரிசையாக 10 ஆட்டங்களில் வென்ற இந்திய அணி கடைசியாக நடந்த மேட்ச்சில் தோல்வி அடைந்து உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 2023 உலகக் கோப்பை பைனல் கடந்த ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பாக நடந்தது. தொடக்கத்தில் பெரிய நம்பிக்கையோடு இந்திய அணி களமிறங்கியது. வரிசையாக 10 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி வென்றது.
இந்த வெற்றி காரணமாக உலகக் கோப்பை பைனல் போட்டியிலும் கூட இந்தியா வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இந்திய அணி திணறியது. ரோஹித் சர்மா 47 ரன்களில் அவுட் ஆன பின் ஆஸ்திரேலிய அணி பவுலிங்கி ல் அதிரடி காட்டியது.
இதை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வீரர்கள் 240 ரன்களுக்கு சுருண்டனர். 50 ஓவரில் இந்தியா 240 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 43 ஓவரில் இலக்கை அடைந்து எளிதாக வென்றது. டிராவிஸ் ஹெட் முக்கியமாக 137 ரன்களை எடுத்தார்.
பாட் கம்மின்ஸ் சிறப்பான கேப்டன்சி: இதில் பாட் கம்மின்ஸ் முறையாக திட்டமிட்டு ஆடினார். முக்கியமாக ஒவ்வொரு வீரருக்கும் ஒரு திட்டமிட்டும் விக்கெட்டுகளை எடுத்தனர். கோலிக்கு பீல்டிங் செட்டப் செய்து பிரஷர் போட்டு அவரை போல்ட் செய்தார். அதேபோல் ஒவ்வொரு வீரருக்கும் கம்மின்ஸ் சிறப்பாக பிளான் போட்டார்.
பவுலிங் ரொட்டிஷன் தொடங்கி பீல்டிங் செட்டப் வரை எல்லாமே சிறப்பாக கம்மின்ஸ் செய்தார். அவரின் சிறப்பான கேப்டன்சி காரணமாக.. ஆஸ்திரேலியா அணி எளிதாக வெறும் 4 விக்கெட்டை இழந்து 241 ரன்களை எடுத்தது. வெறும் 43 ஓவரில் ஆஸ்திரேலியா அணி இலக்கை அடைந்து வென்றது. இதன் மூலம் 6வது முறையாக ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது.
பாட் கம்மின்ஸ் அசத்தல்: ஆட்டத்திற்கு பின் பாட் கம்மின்ஸ் செய்த செயல் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கோப்பையை வென்ற பின் அவர் அகமதாபாத் கிரவுண்ட் ஸ்டாஃப்களிடம் சென்று அந்த கோப்பையை கொடுத்து அவர்களுடன் ஃபோட்டோக்களை எடுத்துக்கொண்டார். அவர் முகம் முழுக்க அப்போது சிரிப்பாக இருந்தது.
பொதுவாக ஆஸ்திரேலிய கேப்டன்கள் இப்படி செயல்பட மாட்டார்கள். அவர்கள் சிரிக்கவே மாட்டார்கள். ஆனால் பாட் கும்மின்ஸ் எல்லா இடங்களிலும் சிரித்தபடி இருக்கிறார். ரிக்கி பாண்டிங், பழைய வார்னர் போல இல்லாமல்.. தன்மையாக இருக்கிறார் . அதோடு எந்த வீரரையும் ஸ்லெட்ஜிங் செய்யாமல் அவர் ஆடும் விதமும் கவனம் பெற்றுள்ளது.
விவாதம்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் நேற்று நாடு திரும்பினார். சிட்னி சென்ற அவருக்கு நேர்ந்த சம்பவம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அவர் நாடு திரும்பிய போது அவரை வரவேற்க யாருமே இல்லை. ஒருவர் கூட அவரை வரவேற்க விமான நிலையத்தில் நிற்கவில்லை.
அவரின் குடும்பத்தை சேர்ந்த 2 பேர் மட்டுமே இருந்துள்ளனர். மற்றபடி மீடியா தொடங்கி கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூட அங்கே நிற்கவில்லை. பெரிதாக அலப்பறை இல்லாமல் மிக சாந்தமாக அவர் வரவேற்கப்பட்டது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications