டெஸ்ட் சாம்பியன் தோல்வி.. ஐசிசி போட்டிகளில் இந்தியா தொடர்ந்து தோற்பது ஏன்? சாட் ஜிபிடி சொன்ன காரணம்!
சென்னை: ஐசிசி போட்டிகளில் இந்தியா தொடர்ந்து தோற்பது ஏன் என்று சாட் ஜிபிடி முக்கியமான காரணங்கள் சிலவற்றை அடுக்கி உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து உள்ளது. கடந்த முறை நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து உள்ளது.

209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. கப்பாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வென்றதை போல வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி துளி அளவு கூட போர்க்குணத்தை காட்டாமல் தோல்வி அடைந்து உள்ளது.
தொடர் தோல்வி: இந்த சாம்பியன்ஷிப் மட்டுமின்றி சமீபத்தில் இரண்டு டி 20 சாம்பியன்ஷிப், ஒரு 50 ஓவர் சாம்பியன் ஷிப், ஆசிய கோப்பை என்று வரிசையாக பல்வேறு தொடர்களில் இந்தியா தோல்வி அடைந்து உள்ளது. இந்த நிலையில் ஐசிசி போட்டிகளில் இந்தியா தொடர்ந்து தோற்பது ஏன் என்று சாட் ஜிபிடி முக்கியமான காரணங்கள் சிலவற்றை அடுக்கி உள்ளது.
சாட் ஜிபிடி: சாட் ஜிபிடி அளித்த பதிலில், ஐசிசி நிகழ்வுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஐசிசி போட்டிகளில் இந்திய அணி இதற்கு முன் வெற்றிகள் மற்றும் தோல்விகள் இரண்டையும் பெற்று இருந்தது உண்மைதான் என்றாலும், சமீப காலமாக அதிக போட்டிகளில் தோல்வி அடைந்து வருகின்றன.
கிரிக்கெட் மிக மிக போட்டி வாய்ந்த விளையாட்டாகும். ஐசிசி தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு சில முக்கியமான காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
அதிக எதிர்பார்ப்புகள் மற்றும் அழுத்தம்: கிரிக்கெட் மீதான இந்திய நாட்டின் அபரிமிதமான ஆர்வம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். பெரும்பாலும் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் அதிக எதிர்பார்ப்புகள் அவர்களுக்கு சுமையாக உள்ளது. ஐசிசி நிகழ்வுகளில் தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்படும் இந்த அழுத்தம் வீரர்களின் மனநிலையையும் செயல்திறனையும் பாதிக்கும்.
சவாலான சூழ்நிலைகள்: ICC நிகழ்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றன. மேலும் இந்திய வீரர்கள் பழக்கமான பிட்சில் இருந்து வேறு பிட்சுகளில் ஆடுகின்றனர். அறிமுகமில்லாத ஆடுகளங்கள், வானிலை நிலைமைகள் மற்றும் விளையாடும் பிட்சுக்கள் அணிக்கு சவாலாக உள்ளன.
அனுபவமின்மை: சில சமயங்களில், ICC நிகழ்வுகளில் பங்கேற்கும் மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது, இந்திய அணியில் ஒப்பீட்டளவில் இளம் அல்லது அனுபவமில்லாத வீரரக்ள் இருக்கலாம். உயர் அழுத்த சூழ்நிலைகளில் அனுபவம் இல்லாதது அணியின் செயல்திறனை பாதிக்கலாம்.
முடிவு எடுப்பதில் தவறுகள்: இந்திய அணியின் உத்திகள், அணித் தேர்வு மற்றும் பயிற்சியாளர்கள் மற்றும் குழு நிர்வாகத்தின் முடிவுகள் ஐசிசி நிகழ்வுகளில் அவர்களின் செயல்திறனை பாதிக்கலாம். தவறான முடிவுகள் அல்லது திட்டங்கள் இந்திய அணியின் தோல்விகளுக்கு வழிவகுக்கும்.
வீரர்கள் பார்ம் மற்றும் காயங்கள்: மற்ற விளையாட்டு அணிகளைப் போலவே, இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடும் அதன் வீரர்களின் பார்ம் மற்றும் காயங்களால் பாதிக்கப்படலாம். முக்கிய வீரர்களின் காயங்கள் அல்லது ஃபார்மில் சரிவு போன்றவை ICC தொடராக்களில் அணியின் ஒட்டுமொத்த செயல்திறனை பாதிக்கலாம்.
கடும் போட்டி போட்டி: ICC நிகழ்வுகளில் உலகின் சிறந்த கிரிக்கெட் அணிகள் இடம்பெறுகின்றன. இதனால் போட்டி கடுமையாக உள்ளது. விளையாட்டில் வலுவான டீமை கொண்ட அணிகளை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்தியா உட்பட எந்த அணிக்கும் இந்தப் போட்டிகளில் இது போன்ற தொடர்கள் சவாலானதாகவே இருக்கும் என்று சாட் ஜிபிடி கூறியுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications