இவரை தூக்குங்க.. தேவையே இல்லை.. ஆஸி.க்கு எதிரான பைனலில் இந்திய அணியில் மாற்றம்? பறக்கும் மெசேஜ்!
சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா மோத உள்ள உலகக் கோப்பை பைனல்ஸ் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் ஆடி உள்ளது. வரிசையாக இந்திய அணி 10 போட்டிகளில் வென்றுள்ளது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் கொஞ்சம் திணறியபடி ஆடி வென்றது.. ஆனால் அதற்கடுத்த ஆட்டங்களில் இந்தியா தொடர்ச்சியாக எதிரணிக்கு எந்த விதமான வாய்ப்பும் கொடுக்காமல்.. கொஞ்சம் கூட பிரஷர் இல்லாமல் வென்றது.

போரிங் மேட்ச் என்று சொல்லும் அளவிற்கு எல்லாமே ஒன்சைட் வெற்றியாக அமைந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை இந்தியாதான் 9 போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தியது. செமி பைனல் ஆட்டம் மட்டும் கொஞ்சம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. மற்றபடி எல்லா மேட்சிலும் இந்தியாதான் ஆதிக்கம் செலுத்தியது.
Logic says Siraj, mind and heart says Ashwin.
— Narayanan Hariharan (@narayananh) November 17, 2023
Trivia: 20% of Ashwin's all time wickets are against Australia. pic.twitter.com/vS9uEZwQbw
முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.
அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்தியா வென்றுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. கடைசியாக இலங்கை, அதன்பின் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் இந்தியா வென்றது. இதன் மூலம் 8 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றது.
Need to Play Ashwin in place of Siraj
— Okay (@Okaytep) November 17, 2023
Take the gamble and some nice surprise element as well
Doesn't matter for lefties or right handed, he'll bring much-needed magic#INDvsAUS
@ImRo45 @BCCI @ashwinravi99
அதன்பின் நெதர்லாந்து அணிக்கு எதிராக வென்றது. கடைசியாக நியூசிலாந்து அணியை செமி பைனலில் வீழ்த்தி இந்திய அணி பைனலுக்குள் வந்துள்ளது. இது போக நேற்று ஆஸ்திரேலியாவிற்கு தென்னாப்பிரிக்காவிற்கும் இடையே செமி பைனல் நடந்தது. இதில் தென்னாபிரிக்கா அடித்த 213 ரன்களை ஆஸ்திரேலியா எளிதாக அடித்து பைனலுக்குள் வந்துள்ளது.
அணியில் மாற்றம்: இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா மோத உள்ள உலகக் கோப்பை பைனல்ஸ் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.
அதன்படி நெட்டிசன்கள் பலர் இணையத்தில் அணியில் அஸ்வினை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியில் உள்ள ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோர் அஸ்வின் ஓவரில் எளிதாக அவுட் ஆக கூடியவர்கள். அதேபோல் ஆஸ்திரேலியாவிற்கு பலமுறை அஸ்வின் கடுமையாக பிரஷர் கொடுத்துள்ளார். எனவே அவரை அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
If necessary take the gamble and make Surya sir and include Ashwin who also can bat ....our Top order batters are doing well in this Tournament but a bad day can happen so that's why I said gamble. So Ashwin in place of Surya Bhai 😜 #Finals #INDvsAUS #CWC23
— Kunal Chatterjee (@KunalCh37079569) November 17, 2023
சிராஜ்; அதோடு அணியில் இருந்து சிராஜை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே சிராஜ் சரியாக பவுலிங் செய்தார். வங்கதேசத்திற்கு எதிராகவும் சிராஜ் கொஞ்சம் சிறப்பாக பவுலிங் செய்தார். மற்ற போட்டிகளில் அவர் சரியாக பவுலிங் செய்யவில்லை.
கடந்த மேட்சில் அவரின் பவுலிங் மோசமாக இருந்தது. விக்கெட் எடுக்கவில்லை என்பதை தாண்டி அவர் அதிக அளவில் ரன்களை கொடுத்தார். ரன்களை வாரி வழங்கினார். அணி இக்கட்டான நேரத்தில் இருக்கும் போது கூட சிராஜ் பிரஷர் போடவில்லை. இதனால் சிராஜை நீக்கிவிட்டு அஸ்வினை அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications