இதுதான் சிஎஸ்கே.. வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு.. ஆனா இதுதான் சிக்கல்.. ஐபிஎல் ஏலத்தில் பரபரப்பு
சென்னை: 2024 ஐபிஎல் ஏலத்தில் இந்திய பவுலர்களை ஏலம் எடுப்பதை சிஎஸ்கே அணி நோக்கமாக வைத்து நகர்ந்து வருகிறது. ஆனால் சிஎஸ்கே அணியின் திட்டம் இதுவரை எடுபடாமல் போனதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன.
இன்று முதல் ஆளாக வந்த அர்ஷ்தீப் சிங்கை சிஎஸ்கே அணி கேட்டது கவனம் பெற்றுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு அவரை ஏலம் கேட்டது. இதில் டெல்லி அணி இணைய.. ஏலம் 7.5 கோடி ரூபாய் வரை சென்றது. 7.5 கோடி ரூபாய்க்கு சென்னை அணி போட்டியில் இருந்து விலகியது. இதையடுத்து குஜராத் அணி போட்டியில் இணைந்தது. பின்னர் 10 கோடி தாண்டி ஏலம் சென்ற நிலையில் 15 கோடி ரூபாய் தாண்டிய நிலையில் ஹைதராபாத் - ராஜஸ்தான் இடையே கடுமையான போட்டி நிலவியது.

15.75 லட்சம் ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஏலம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி அர்ஷ்தீப் சிங்கை எடுக்க முடிவு செய்தது. இதையடுத்து 18 கோடி ரூபாய்க்கு அவரின் ஏலத்தை இதையடுத்து ஹைதராபாத் உயர்த்தியது. அதை பஞ்சாப் அணி ஏற்றுக்கொண்ட நிலையில்.. அவர் பஞ்சாப் அணிக்கு ஏலம் விடப்பட்டார்.
அதேபோல் இன்று தொடக்கத்திலேயே முகமது ஷமியை ஏலம் எடுக்க சிஎஸ்கே அணி தீவிரமாக முயன்றது. கொல்கத்தா அணியுடன் சிஎஸ்கே அணி தீவிரமாக மோதியது. பின்னர் இந்த மோதலில் லக்னோ அணி இணைந்தது. ஆனால் 5 கோடி ரூபாய்க்கு மேல் சிஎஸ்கே அணி பெரிதாக ஏலத்தில் ஆர்வம் காட்டவில்லை. கடைசியில் போட்டி கொல்கத்தா - லக்னோ அணிகளுக்கு இடையே சென்றது. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணியும் போட்டியில் ஐக்கியம் ஆனது. இறுதியாக 10 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியால் ஷமி எடுக்கப்பட்டார் .
இரண்டு பேரையும் 7 - 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்க சிஎஸ்கே முயன்றது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் சிஎஸ்கே பின்வாங்கியது. இதேபோல்தான் சாஹலை எடுக்க தொடக்கத்தில் சிஎஸ்கே முயன்றது. அவரும் 8 கோடி ரூபாயை தாண்டுகிறார் என்றதும் சிஎஸ்கே பின்வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி ரூபாயை பர்சில் வைத்துள்ளது. இதன் காரணமாகவே வீரர்களுக்கு நிறைய தொகை தர விரும்பவில்லை. ஏனென்றால் வேறு சில வீரர்களை சிஎஸ்கே 10 கோடி ரூபாய்க்கு மேல் எடுக்க முயற்சி செய்யலாம். இதுதான் சிஎஸ்கே அணிக்கு இடிக்கிறது.
ஒவ்வொரு அணிக்கும் உள்ள ஏல பர்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் - ரூ 110.5 கோடி (அதிகபட்சம்)
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 41 கோடி (குறைந்தபட்சம்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் - 73 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 69 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - 69 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடி
மும்பை இந்தியன்ஸ் - 45 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி
மிக உயர்ந்த மற்றும் குறைந்த ரிசர்வ் விலைகள்
ரூ.2 கோடியே அதிக ரிசர்வ் விலையாகும், இந்த தொகையில் 81 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
குறைந்த ரிசர்வ் விலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications