ஐபிஎல் 2024ல் கொல்கத்தா சாம்பியன் ஆனதை.. லோக்சபா தேர்தல் முடிவோடு பலரும் ஒப்பிடுவது ஏன்? என்ன லாஜிக்
சென்னை: நேற்று ஐபிஎல் 2024 பைனல் ஆட்டத்தில் பலரும் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பலரை பாராட்டி இருந்தனர். இதை நெட்டிசன்கள் பலரும் ஜூன் 4ம் தேதி வரப்போகும் லோக்சபா தேர்தல் முடிவோடு ஒப்பிட்டு வருகின்றனர்.
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

கடந்த வாரம் 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் 6ம் கட்ட தேர்தல் நடந்தது. நேற்று நடந்த ஆறாவது கட்டத் தேர்தலில் எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (UTs) மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நேற்று 6 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் தேர்தலை சந்தித்த 58 தொகுதிகளில் தோராயமாக 61.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இனி கடைசியாக 7ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன.
தேர்தல் முடிவுகள்: இப்படிப்பட்ட நிலையில் நேற்று ஐபிஎல் 2024 பைனல் ஆட்டத்தில் பலரும் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பலரை பாராட்டி இருந்தனர். இதை நெட்டிசன்கள் பலரும் ஜூன் 4ம் தேதி வரப்போகும் லோக்சபா தேர்தல் முடிவோடு ஒப்பிட்டு வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி நடந்தது.நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணி எந்த விதமான அதிரடியும் காட்டாமல் 18.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து சுருண்டது. ஹெட், கெல்சன், அபிஷேக் சர்மா, திரிப்பதி, ஷாபாஸ் அகமது, என்று யாருமே பெரிதாக அந்த அணியில் அதிரடி காட்டவில்லை.
இதையடுத்து இறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்திலேயே ஓவருக்கு 10 அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து.. எந்த விதமான திரில்லிருக்கும் இடம் கொடுக்காமல் அடித்து ஆடியது. மெதுவாக ஆட வேண்டும் என்று யோசிக்காமல் குர்பாஸ் 39 ரன்கள் எடுக்க, வெங்கடேஷ் 52 ரன்கள் எடுக்க, வெறும் 10.3 ஓவரில் 114-2 ரன்கள் எடுத்து எளிதாக கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக கொல்கத்தா சாம்பியன் ஆகி உள்ளது.
ஒப்பீடு: இதை நெட்டிசன்கள் பலரும் ஜூன் 4ம் தேதி வரப்போகும் லோக்சபா தேர்தல் முடிவோடு ஒப்பிட்டு வருகின்றனர். இதற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1. கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா தோற்ற போது இந்திய வீரர்களை சந்தித்த மோடியை ஷ்ரேயாஸ் ஐயர் இகழ்வது போல நடந்து கொண்டார். மோடி கைகொடுத்த பின் கோபமாக ஷ்ரேயாஸ் ஐயர் இன்னொரு பக்கம் திரும்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
2. அதேபோல் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்யும் பத்திரிகையாளர் துருவ் ரத்தியை ஷ்ரேயாஸ் ஐயர் பின்தொடருகிறார். எக்ஸ் செயலியில் பின் தொடருகிறார்.
3. பாஜகவினர் பலரும் கடுமையாக விமர்சனம் செய்யும் ஷாருக்கான் கொல்கத்தா அணியின் ஓனர்.
4. தொடக்கத்தில் 270+ ரன்களை எடுத்த ஹைதராபாத் நேற்று 120 ரன்களை கூட எடுக்க முடியாமல் சுருண்டது. இதை பாஜகவின் 2700+ இலக்கோடு ஒப்பிட்டு ஹைதராபாத் போல பாஜகவும் 120க்கு சுருளும் என்றெல்லாம் பேசி வருகின்றனர்.
5. வரிசையாக வென்ற கம்மின்ஸ் தோல்வி அடைந்தது போல.. பாஜகவும் தோற்கும் என்றும் பேசி வருகின்றனர்.
இதெல்லாம் கேட்க, விவாதிக்க சுவாரசியமாக இருந்தாலும்.. மேலே நெட்டிசன்கள் கூறிய எந்த காரணத்தாலும் லாஜிக் இல்லை. லாஜிக் வைத்து யோசித்து பார்த்தால் மேலே குறிப்பிட்ட எதுவும் பாஜக தோல்வி அடையும் என்பதை காட்டவில்லை.
வெறுமனே இப்படி இருக்கலாமோ.. அப்படி இருக்கலாமோ என்று ஒப்பிடலாம். ஆனால் உண்மையில் இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா என்றால்.. கடல்லயே இல்லையாம்!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications