ஷாகீர் கானுக்கு நேர்ந்த அதே கதி.. சிறப்பாக ஆடியும் முகமது ஷமியை சூழ்ந்த சிக்கல்.. என்ன கொடுமை இது?
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் பவுலர் ஷாகீர் கானுக்கு ஏற்பட்ட அதே நிலைமை முகமது ஷமிக்கும் ஏற்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

2011 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடிய இந்தியாவின் அணி ஒரு முழுமையான அணியாக இருந்தது. 2011 இல் எம்எஸ் தோனி தலைமையிலான அணி வலுவான அணியாக வந்து அந்த தொடரை துவம்சம் செய்தது. இந்த தொடரில் பலரும் தோனியின் சிக்ஸ் பற்றி பேசி இருப்பார்கள்.. அவரின் கேப்டன்சி பற்றியும் பேசி இருப்பார்கள்.
அதேபோல் யுவராஜ் சிங்கின் அதிரடி தொடர் ஆட்டமும் கவனம் பெற்றது. தொடர்ச்சியாக அவர் சிறப்பாக ஆடியது.. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செமி பைனலில் ஆடியது என்று பலரும் அதை பற்றி பேசி உள்ளனர். எனக்கு கிரெடிட் கொடுக்கவில்லை. கொடுக்கவில்லை என்று கூறியே.. கம்பீரும் தனக்கான கிரெடிட்டை இந்த தொடரில் பெற்றுக்கொண்டார்.
முக்கியமாக பைனலில் அவர் ஆடிய ஆட்டத்திற்கான கிரெடிட் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து அதன் மூலம் கிரெடிட் பெறாத ஒரே ஆள் ஷாகீர் கான்தான். அவருக்கு உரிய போதிய கிரெடிட் அவருக்கு வழங்கப்படவே இல்லை.
ஷாகீர் கான்: 21 விக்கெட்டுகளுடன் ஜாகீர் கான் போட்டியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே தொடரில் ஷாஹித் அப்ரிடியும் இதே அளவு விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் அவரை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அந்த தொடருக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஓரம்கட்டப்பட்டார். வயது காரணமாக ஒதுக்கப்பட்டார்.
அது எல்லாம் சரிதான் என்றாலும் அதன்பின் நடந்த பல்வேறு கிரிக்கெட் மேடைகளிலும் கூட ஷாகீர் கான் பெயர் பேசப்படவே இல்லை. அவரை பற்றி யாரும் பெரிதாக எங்கும் பேசவில்லை. சர்வதேச போட்டிகளில் ஒரு வீரர் பவுலிங் செய்ய வந்தாலே ஒரு விக்கெட்டையாவது எடுப்பார் என்றால் அது இரண்டு பேர்தான். ஒன்று ஷாகீர் கான். இன்னொருவர் ஸ்டார்க். இதில் ஸ்டார்க் வாங்கிய பெயரை கூட ஷாகீர் கான் பெறவில்லை.
ஷமி; இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் பவுலர் ஷாகீர் கானுக்கு ஏற்பட்ட அதே நிலைமை முகமது ஷமிக்கும் ஏற்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சீசனில் வாய்ப்பு கிடைக்காமல் ஹர்திக் பாண்டியாவின் காயம் காரணமாக ஷமி அணிக்குள் வந்தார். வந்த முதல் மேட்சில் இருந்தே அவர் அதிரடியாக ஆடி வருகிறார்.
கடந்த மேட்சில் 4 விக்கெட், அதற்கு முந்தைய மேட்சில் 5 விக்கெட் என்று ஷமி ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறார். இவரை ஏன் உட்கார வைத்தார்கள் என்று பலரும் கேட்கும் அளவிற்கு அவரின் ஆட்டம் உள்ளது,
உலகக் கோப்பை போட்டியில் ஷமி ஆடிய INNINGS 13. அவர் எடுத்த விக்கெட் 40. குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் ஷமி முதலிடத்தில் இருக்கிறார். ஆனாலும் அணியில் இவர் இடம் இன்னும் உறுதியாகவில்லை. ஷாகீர் கான் 23, ஸ்ரீநாத் 34 போட்டிகளில் செய்ததை இவர் 13 போட்டிகளில் செய்து அசத்தி உள்ளார். ஆனாலும் அணியில் இவர் இடம் இன்னும் உறுதியாகவில்லை.
அணி மாற்றம்: இந்த நிலையில்தான் இலங்கைக்கு எதிராக நாளை மறுநாள் இந்தியா ஆட உள்ள உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா கசப்பான 2 முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது. முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹர்டிக் பாண்டியா காயம் அடைந்தார். அவர் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பி உள்ளார்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் ஆடும் வாய்ப்புகள் உள்ளனர். அவர் காயம் காரணமாக அணியில் ஷரத்துல் தாக்கூர் நீக்கப்பட்டார். கூடுதல் பேட்ஸ்மேன் வர வேண்டும் என்று சூர்யா குமார் யாதவ் உள்ளே கொண்டு வரப்பட்டார்.

அதேபோல் ஷமி அணிக்குள் எடுத்து வரப்பட்டார். இந்த நிலையில்தான் ஹர்திக் உள்ளே வருவதால் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.
மாற்றம் 1 வாய்ப்பு - ஹர்திக் மட்டும் உள்ளே கொண்டு வரப்பட்டு சூர்ய குமார் யாதவ் மட்டும் நீக்கப்படலாம் அப்படி செய்யப்பட்டால் ஷமி , சிராஜ், ஹர்திக், ஜடேஜா, குல்தீப், பும்ரா என்று 6 பவுலர்கள் இருப்பார்கள்.
மாற்றம் 2 வாய்ப்பு - ஹர்திக் உள்ளே கொண்டு வரப்பட்டு சூர்ய குமார் யாதவ் நீக்கப்படாமல் சிராஜ் அல்லது ஷமி நீக்கப்படலாம் அப்படி செய்யப்பட்டால் ஷமி அல்லது சிராஜ், ஹர்திக், ஜடேஜா, குல்தீப், பும்ரா என்று 5 பவுலர்கள் இருப்பார்கள். ஆனால் கூடுதல் பேட்டிங் இருக்கும். இப்படி சிறப்பாக ஆடியும் கூட ஷமிக்கு அணியில் நிரந்தர இடம் இல்லை என்பதே சோகமான விஷயமாக உள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications