நீலம் டூ காவி..பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ஜெர்சி மாற்றம்? பிசிசிஐ தந்த முக்கிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஜெர்சி நீல நிறத்தில் இருந்து காவி வண்ணத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் உலககோப்பை கிரிக்கெட்டின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட காவி நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் அதுபற்றி பிசிசிஐ தெளிவுப்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான ஜெர்சி காலம்காலமாக நீலநிறத்தில் இருந்து வருகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி என்றாலே நீலநிற ஜெர்சி தான் நினைவுக்கு வரும்.

Will India wear special saffron jersey during pakistan clash in world cup? BCCI Treasurer Ashish Shelar says this

மேலும் உலககோப்பை உள்பட சில முக்கிய தொடர்களின்போது ஒவ்வொரு அணியின் ஜெர்சியும் புதிதாக அறிமுகம் செய்யப்படும். இந்திய அணியை பொறுத்தமட்டில் நீலநிறத்திலான ஜெர்சியில் சிறுசிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும்.

இத்தகைய சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி நிறம் விவாதத்தை கிளப்பியது. அதாவது உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஜெர்சியின் நிறம் நீலநிறத்துக்கு பதில் காவி நிறமாக மாற்றப்பட்டு இருந்தது. முழுமையாக காவி நிறத்தில் அந்த ஜெர்சி இருந்தது.

இது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பிசிசிஐயின் செயலாளராக இருக்கும் நிலையில் இந்திய அணி காவிமயமாக்கப்படுவதாக எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பலரும் விமர்சனம் செய்தனர். அதேநேரத்தில் சிலர் ஆதரவும் தெரிவித்தனர்.

இத்தகைய சூழலில் தற்போது உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி உள்ள நிலையில் இன்னொரு தகவல் வெளியானது. அதாவது உலககோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வரும் 14ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன. இந்த போட்டியில் இந்திய அணி நீல நிற ஜெர்சிக்கு பதில் காவி நிறத்திலான ஜெர்சியில் களமிறங்க உள்ளதாக சில செய்திகள் வெளியாகின.

இதனை ஒரு தரப்பு உண்மை எனக்கூற, இன்னொரு தரப்பு பொய் என்றது. இந்நிலையில் தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா காவி நிற ஜெர்சியில் களமிறங்குகிறதா? இல்லையா? என்பது பற்றி பிசிசிஐயின் பொருளாளரான ஆஷிஷ் ஷெலர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் காவி நிற ஜெர்சியில் இந்தியா விளையாட உள்ளதாக கூறும் தகவலை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ‛‛பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வேறு ஜெர்சியில் களமிறங்கும் என வெளியான செய்தியை நாங்கள் நிராகரிக்கிறோம். இப்படி வெளியான செய்தி என்பது அடிப்படை ஆதாரமற்றது. இது ஒருவரின் கற்பனையால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். 2023 உலககோப்பை கிரிக்டக போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நீல நிற ஜெர்சியில் தான் விளையாட உள்ளது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+