வெறும் 7% சான்ஸ்தான்.. உலகக் கோப்பையில் இருந்து நாக் அவுட் ஆகும் 2வது பெரிய அணி.. பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023 உலகக் கோப்பை தொடரில் இருந்து நாக் அவுட் ஆக போகும் இரண்டாவது அணி எதுவாக இருக்கும் என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் 2023 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து நாக் அவுட் ஆவது உறுதியாகி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் இறங்கி இந்தியா ஆடியது.

Will Pakistan be the second country to get knocked out of the 2023 World Cup?

தொடக்கத்திலேயே இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அணியை சரிவில் இருந்து மீட்டு ரோஹித் சர்மா சிக்ஸ், பவுண்டரி என்று அடித்தார். 101 பந்துகள் பிடித்த 87 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ராகுல் 39 ரன்கள் எடுத்தார் . இதனால் 180ல் சுருண்டிருக்க வேண்டிய இந்திய அணி 229-9 ரன்கள் எடுத்தது.

இந்தியா வெற்றி: இதையடுத்து பவுலிங் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து வீரர்கள் மீது பிரஷர் போட்டது. டேவிட் மாலன் விக்கெட்டை 16 ரன்களுக்கு பும்ரா எடுத்தார். அடுத்த பந்தே ஜோ ரூட் விக்கெட்டை பும்ரா எடுத்தார். பின்னர் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை ஷமி டக் அவுட்டில் எடுக்க இங்கிலாந்து அணி திணறியது., அடுத்து பிரைஸ்டா விக்கெட்டை 14 ரன்களுக்கு சமி எடுத்தார்., அடுத்த 25 ரன்களுக்கு குட்டி பார்ட்னர் ஷிப் அமைத்த பட்லர் மெயின் அலி.. குல்தீப், சமி பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 129 ரன்களுக்கு இங்கிலாந்து அவுட் ஆக இந்தியா வென்றது.

023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.

அதன்பின் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராகவும் இன்று லோ ஸ்கோர் ஆட்டத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் 6 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.

இங்கிலாந்து அவுட்: இதன் மூலம் இதன் மூலம் 2023 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து நாக் அவுட் ஆவது உறுதியாகி உள்ளது. நேற்று இலங்கை அணியும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்தது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு செமி பைனல் செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதனால் 2023 உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்புகள் பின்வருமாறு மாறி உள்ளன. அதன்படி

இந்தியா - 99.9%.
தென்னாப்பிரிக்கா - 95%.
நியூசிலாந்து - 77%.
ஆஸ்திரேலியா - 75%.

ஆப்கானிஸ்தான் - 32%.
பாகிஸ்தான் - 7%.
இலங்கை - 7%.
நெதர்லாந்து - 6%.
பங்களாதேஷ் - 0.7%.
இங்கிலாந்து - 0.4% வாய்ப்பு உள்ளது.

இதில் பாகிஸ்தானுக்கு 7%.சதவிகிதம் மட்டுமே செமி பைனல் செல்ல சான்ஸ் உள்ளது. அதனால் இந்த சீசனில் பாகிஸ்தான் அடுத்த அணியாக நாக் அவுட் ஆகவே வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+