டாஸ் தோற்றால் இந்தியா ஜெயிக்குமா? உலககோப்பை பைனல் வரலாறு இதுதான்! அப்போ சாம்பியன் நாமதானா? ஆஹா
அகமதாபாத்: 50 ஓவர் உலககோப்பை பைனலில் டாஸ் தோற்றால் இந்திய அணிக்கு அது சாதகமாக அமைந்துள்ளது. அதோடு டாஸ் தோற்ற 2 பைனல்களில் இந்தியா கோப்பையை வென்றதும், டாஸ் ஜெயித்த இன்னொரு பைனலில் தோற்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் டாஸ் தோற்றால் போட்டியில் வெற்றி கிடைக்கும் என்ற அதிர்ஷ்டம் இன்றும் தொடருமா? என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்டில் பைனல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா அணி மோதி வருகிறது. இந்த போட்டியை பிரதமர் மோடி உள்பட பல மாநில முதல்வர்கள், வெளிநாட்டு தலைவர்கள் நேரில் ரசித்து வருகின்றனர்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றது. அந்த அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் இந்தியா பேட்டிங் ஆடி வருகிறது. 24.2 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் பொறுமையாக ஆடி வருகின்றனர்.
நடப்பு உலககோப்பை தொடரில் இந்தியா இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. விளையாடிய 10 போட்டிகளிலும் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளது. இதனால் இந்த பைனலிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று உலககோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இந்நிலையில் தான் இந்திய அணிக்கும், 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் பைனல் போட்டியில் போடப்படும் டாஸ்-க்கும் இடையே நெருக்கமான உறவு உள்ளது.
அதாவது இன்றைய போட்டியோடு சேர்த்து 50 ஓவர் உலககோப்பை போட்டியில் இந்தியா 4வது முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ளது. இதற்கு முன்பு 1983, 2003, 2011 ஆகிய ஆண்டுகளில் இந்தியா உலககோப்பை கிரிக்கெட்டில் பைனலில் விளையாடி உள்ளது. இதில் 1983, 2011 ஆகிய ஆண்டுகளில் இந்தியா கோப்பையை வென்றுள்ளது. 2003ல் ஆஸ்திரேலியாவுடன் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் தான் இன்று உலககோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்தியா டாஸ் தோற்றதால் அதிர்ஷ்டம் கைக்கொடுக்கவில்லை என சில ரசிகர்கள் புலம்ப தொடங்கி உள்ளனர். இத்தகைய சூழலில் தான் இந்தியாவின் வரலாறு என்பது வேறுவிதமாக உள்ளது. அதாவது 50 உலககோப்பை போட்டியை பொறுத்தமட்டில் பைனலில் இந்தியா டாஸ் ஜெயித்தால் தோற்பதும், டாஸ் தோற்றால் ஜெயிப்பதும் தான் வழக்கமாக உள்ளது.
அதாவது கடந்த 1983ம் ஆண்டில் நடந்த உலககோப்பை போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இந்தியா 183 ரன்கள் குவித்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 140 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் இந்தியா முதல் முறையாக உலககோப்பையை வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸில் தோற்றது.
அதன்பிறகு 2003ம் ஆண்டில் நடந்த உலககோப்பை பைனலில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. கேப்டன் சவுரவ் கங்குலி பவுலிங்கை தேர்வு செய்தார்.இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. இந்தியா 234 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி கோப்பையை நழுவ விட்டது.
இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டில் இந்தியா-இலங்கை அணிகள் பைனலில் மோதின. இதில் இலங்கை அணியின் கேப்டன் சங்கக்கரா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா டாஸை இழந்த நிலையில் முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இந்தியா 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 2வது முறையாக உலககோப்பையை வென்றது.
இந்த 3 பைனல் போட்டிகளை பார்த்தால் இந்தியா டாஸ் தோற்ற 2 இறுதி போட்டிகளில் (1993, 2011) ஆகியவற்றில் தான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. டாஸ் ஜெயித்த 2003ம் ஆண்டில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதனால் இன்றைய பைனலிலும் இந்தியா டாஸை தோற்றுள்ளதால் முந்தைய காலத்தை போல் இந்தியா ஜெயிப்பார்கள் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications