இன்று உலக கோப்பை இறுதி போட்டி! சென்னையில் பீச் பக்கம் போங்க.. மாஸா இருக்கும்.. வாவ் போடும் ரசிகர்கள்
சென்னை: இன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் நிலையில், தலைநகர் சென்னையில் இந்தப் போட்டியைப் பார்த்து ரசிக்க அட்டகாசமான ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கிறது. 13ஆவது உலகக் கோப்பை தொடர் கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் லீக் போட்டிகள் நடைபெற்றன.

கடந்த 2011க்கு பிறகு இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை தொடர் என்பதால் இதன் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. 2011 உலகக் கோப்பையைப் போலவே இந்த முறையும் இந்தியா வெல்ல வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருந்தது.
உலகக் கோப்பை: இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்று முடிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் டாப் 4 இடங்களில் வந்தன. இதில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இந்தியா கலக்கல் வெற்றி பெற்றது.
இதில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்தது. இதில் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சதமடித்தனர். தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் மட்டும் 119 பந்துகளில் 134 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், பிலிப்ஸ் ஆகியோர் தங்கள் பங்களிப்பை அளித்த போதும் மற்றவர்கள் சொதப்பினர். இதனால் நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 327க்கு ஆல் அவுட் ஆனது. அட்டகாசமாக பவுலிங் போட்ட ஷமி 7 விக்கெட்களை வீழ்த்தினர்.
இறுதிப் போட்டி: தொடர்ந்து கொல்கத்தாவின் ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கிடையே இரு அணிகளும் போதும் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் நிலையில், அதற்கு முன்பு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக லீக் சுற்றில் இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டி சென்னையில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து இந்தியா இறங்கிய போது 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்தது. அதன் பிறகு கோலி மற்றும் ராகுல் பொறுப்புடன் விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினர். அதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
சென்னை பீச்: இந்தச் சூழலில் தான் மீண்டும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகிறது. இதற்கிடையே இந்த இறுதிப் போட்டியைக் கடற்கரையில் நேரலையில் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் திரையிடத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் ஒன்றாக அமர்ந்து இந்த இறுதிப் போட்டியைக் கண்டு ரசிக்கலாம்.
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications