"விட்டது கேட்ச் அல்ல.. உலகக்கோப்பையை தம்பி" அன்று கிப்ஸ், இன்று ஸ்டீவ் ஸ்மித்.. சொல்லி அடித்த பவுமா!
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வெறும் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதனால் 74 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியா அணி மிட்சல் ஸ்டார்க்கின் அபார அரைசதம் காரணமாக 207 ரன்களை குவித்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இரண்டரை நாட்களில் எட்டக் கூடிய இலக்கு என்றாலும், தென்னாப்பிரிக்கா அணி தாக்கு பிடிக்குமா என்ற கேள்வி எழுந்தது.

மார்க்ரம் - பவுமா
ஆனால் தென்னாப்பிரிக்கா அணியின் சீனியர் வீரர்களான மார்க்ரம் மற்றும் கேப்டன் பவுமா 5 மணி நேரமாக பேட்டிங் விளையாடி மொத்த ஆஸ்திரேலியா அணியையும் அமைதியாக்கினர். தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் ரிக்கல்டன் 6 ரன்களிலும், முல்டல் 27 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேற, மார்க்ரம் - பவுமா கூட்டணி இணைந்தது.
ஸ்டீவ் ஸ்மித் தவறு
அப்போது பவுமா கொடுத்த எளிய கேட்சை ஸ்டீவ் ஸ்மித் கோட்டைவிட்டார். இதன்பின் மார்க்ரம் தனது 8வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்ய, இன்னொரு பக்கம் பவுமா கேப்டனாக கொஞ்சம் கூட பதற்றம் இன்றி அரைசதம் கடந்து அசத்தினார். இத்தனைக்கும் பவுமாவுக்கு ஹேம்ஸ்ட்ரிங் காயம் ஏற்பட்டு, அவரால் ஓடவே முடியவில்லை.
வெற்றிக்கு அருகில்
ஆனாலும் ஓய்வறைக்கு செல்லாமல் 3வது நாள் கடைசி பந்து வரை களத்திலேயே இருந்தார். இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களுடன் களத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவையாக இருப்பதால், நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்லும் என்று எதிபார்க்கப்படுகிறது.
1999 உலகக்கோப்பை
இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி நீண்ட காலமாக சுமந்து வரும் சோக்கர்ஸ் என்ற அடையாளத்தை தூக்கி எறியும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் 1999 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது.
ஸ்டீவ் வாஹ் சொன்ன வார்த்தை
272 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா சேஸிங் செய்யும் போது, 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும். அப்போது ஸ்டீவ் வாஹ் கொடுத்த எளிய கேட்சை கிப்ஸ் கோட்டைவிட்டுவிடுவார். அதன்பின் அவரின் அபார சதம் காரணமாக ஆஸ்திரேலியா வெல்லும். அப்போது கிப்ஸிடம் ஸ்டீவ் ஸ்மித், நீ விட்டது கேட்சை அல்ல.. உலகக்கோப்பையை என்று சொன்னதாக கூறப்படுகிறது.
அதே நாள், அதே சம்பவம்
அந்த போட்டி நடந்த நாள் ஜூன் 13ஆம் தேதியாகும். அதே நாளில் அப்படியொரு ஐசிசி இறுதிப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா கேட்சை விட, உலகமே இன்று ஆஸ்திரேலியாவை பார்த்து, நீங்கள் விட்டது கேட்சை அல்ல.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை என்று சொல்லி வருகிறது. இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் கனவு நிறைவேறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications