நாடு முழுக்க பல லட்சம் விண்ணப்பங்கள்.. ஆபீஸுக்கு 'பங்க்' போட ரெடியான ஊழியர்கள்! காரணம் ஒரு கேம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுவதும் உள்ள வீடியோ கேம் பிரியர்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 'கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6' (Grand Theft Auto VI - GTA 6) கேம், நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த கேமை விளையாடுவதற்காக, உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ஐடி மற்றும் கார்ப்பரேட் ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

sports game

இந்தியாவில் 60% அதிகரித்த விடுமுறை!

சர்வதேச HR நிறுவனங்களின் தரவுகளின்படி, GTA 6 கேம் வெளியாகும் நாளை ஒட்டி உலக அளவில் ஊழியர்களின் வருடாந்திர விடுமுறை விண்ணப்பங்கள் 32 சதவீதம் அதிகரித்துள்ளன. இதில் குறிப்பாக, இந்தியாவில் விடுமுறை கோருவோரின் எண்ணிக்கை 60 சதவீதம் வரை உயர்ந்து உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் பல லட்சம் பேர் விடுமுறைக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த கேம் வியாழக்கிழமை வெளியாவதால், சுமார் 30 சதவீத ஊழியர்கள் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை எடுத்துள்ளனர். இதன் மூலம் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களையும் சேர்த்து, தொடர்ந்து 4 நாட்களுக்கு இடைவிடாமல் கேம் விளையாட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இங்கிலாந்தில் மட்டும் இந்த கேமிற்காக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 83,000 நாட்கள் விடுமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஹனிமூன், பண்டிகை நாட்கள், திருமண விழாக்களுக்காக எடுக்கப்படும் விடுமுறைகளை விட அதிகமாகும்.

விடுமுறை அறிவித்த சென்னை நிறுவனம்

ஊழியர்களின் இந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்ட சில நிறுவனங்களும் தாமாக முன்வந்து விடுமுறை அறிவித்து வருகின்றன. சென்னையைச் சேர்ந்த இண்டே பை சேர்ஸ்கார்ட் என்ற இன்டீரியர் டிசைன் நிறுவனம், நவம்பர் 19-ம் தேதி தங்கள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்களுக்கும் சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளது.

13 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு GTA 6 வெளியாகும் நாளை சாதாரண வியாழக்கிழமையாகக் கடந்து செல்ல விரும்பவில்லை என அந்நிறுவனத்தின் சிஇஓ கிஷோர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதேபோல், உலகப் புகழ்பெற்ற லாஜிடெக் நிறுவனம் தனது 7,000 ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய கேமிங் விடுமுறையையும், ஜப்பானின் பாக்கெட்பேர் நிறுவனம் வைஸ் சிட்டிக்கு பிசினஸ் பயணம் என்ற பெயரில் சிறப்பு விடுப்பையும் வழங்கியுள்ளன.

212 ஜிபி டவுன்லோடு

பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள கேம் பிரியர்கள் இப்போதே தயாராகிவிட்டனர். பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸஆகியவற்றில் விளையாடுவதற்காக, சுமார் 212 ஜிபி அளவு கொண்ட இந்த பிரம்மாண்ட கேமை முன்கூட்டியே டவுன்லோட் செய்து வைத்துள்ளனர்.

இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 12 மணிக்கு இந்த கேம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. ஆனால், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நேர வித்தியாசம் காரணமாக சில மணி நேரங்களுக்கு முன்பே கேம் வெளியாகிவிடும். இதனால், பல இந்திய வீரர்கள் தங்கள் கன்சோல்களின் இருப்பிடத்தை டிஜிட்டல் முறையில் நியூசிலாந்துக்கு மாற்றி, முன்கூட்டியே விளையாடத் தயாராகி வருகின்றனர்.

தொடர்ந்து 4 நாட்கள் வெளியே செல்லாமல் கேம் விளையாடுவதற்காக, பலர் தங்கள் வீடுகளையே சிறிய தியேட்டர்கள் போல மாற்றியுள்ளனர். புதிய 4K OLED டிவிக்கள் வாங்குவது, மற்ற கேம்களை நீக்கிவிட்டு ஸ்டோரேஜை காலி செய்வது என தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

2013-ம் ஆண்டு GTA 5 வெளியானபோது பள்ளி, கல்லூரி மாணவர்களாக இருந்தவர்கள், இன்று வருமானம் ஈட்டும் ஊழியர்களாக உள்ளனர். அதனால், கையில் பணமும், விடுமுறையும் இருக்கும் நிலையில், இணையத்தில் இதன் கதை கசிவதற்கு முன்பாகவே வைஸ் சிட்டி உலகிற்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற ஆர்வமே இந்த விடுமுறைகளுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+