இதயத்தை வென்ற கேப் வெர்டே அணி.. அர்ஜெண்டினாவுக்கு மரண பயத்தை காட்டிட்டாங்க.. ஓபனாக சொன்ன மெஸ்ஸி!

Subscribe to Oneindia Tamil

மியாமி: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் கேப் வெர்டே அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. கூடுதல் நேரம் வரை நீடித்த இந்த ஆட்டத்தில், உலகக்கோப்பையில் அறிமுகமான ஒரு சிறிய தீவு நாடான கேப் வெர்டே, அர்ஜென்டினாவைத் திணறடித்து மரண பயத்தைக் காட்டியது என்றே சொல்லலாம்.

ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு அபாரமான கோல் அடித்து அர்ஜென்டினாவை முன்னிலைப்படுத்தினார். உலகக்கோப்பை வரலாற்றில் மெஸ்ஸி அடித்த 20வது கோல் இதுவாகும். இதன் மூலம் அவர் கிலியன் எம்பாப்பேவை விட 2 கோல்கள் முன்னிலை பெற்று உலக சாதனையை நீட்டித்துள்ளார்.

Lionel Messi

இருப்பினும் 58வது நிமிடத்தில் கேப் வெர்டேவின் டெராய் டுவார்டே கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். பின்னர் கூடுதல் நேரத்தில் 92வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினெஸ் ஒரு கோல் அடித்தார். ஆனால், கேப் வெர்டே அணி அசராமல் 102வது நிமிடத்தில் சிட்னி லோப்ஸ் கப்ராலின் அற்புதமான கோல் மூலம் மீண்டும் 2-2 என சமநிலையை எட்டியது.

இறுதியாக, 111-வது நிமிடத்தில் கிறிஸ்டியன் ரொமேரோ அடித்த ஹெட்டர் பந்து, கேப் வெர்டே அணியின் டிஃபென்டர் தினே போர்ஜஸ் மீது பட்டு Own Goal-ஆக மாறியது. இதனால் அர்ஜென்டினா 3-2 எனத் தப்பித்து, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றில் அர்ஜென்டினா அணி எகிப்தை எதிர்கொள்ள உள்ளது.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய லியோனல் மெஸ்ஸி பேசுகையில், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இது மிகவும் கடினமான போட்டியாக இருக்கும் என்று எங்களுக்கு முன்பே தெரியும். கேப் வெர்டே அணி ஸ்பெயின் மற்றும் உருகுவே போன்ற ஜாம்பவான் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றது ஒன்றும் தற்செயலானது அல்ல.

நாங்கள் முதல் கோலை அடித்தவுடன் ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும், நிதானமாக விளையாடலாம் என்று நினைத்தோம். ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்துவிட்டது. நாங்கள் பந்து தன்வசமிருப்பதை இழந்து தடுமாறிவிட்டோம். எங்களால் அவர்களைச் சரியாக அழுத்தத்திற்கு தள்ள முடியவில்லை. இது உலகக்கோப்பையின் நாக்கவுட் சுற்று, இங்கு யாரும் உங்களுக்கு வெற்றியை இலவசமாகத் தந்துவிட மாட்டார்கள்.

சில அணிகளின் பெயர்களை வைத்துப் பலவீனமான அணி என்று எடைபோட்டுவிட முடியாது. இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பல தவறுகளை செய்தோம், அதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் அறிமுகமாக களம் புகுந்து ஒட்டுமொத்த உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது கேப் வெர்டே அணி. அதிலும் அந்த கோல் கீப்பர் 40 வயதை எட்டினாலும், சாதிக்க முடியும் என்று நிரூபித்து அசரடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+