மல்யுத்த போட்டியில் இருந்து விலகுவதாக ஷாக்சி மாலிக் அறிவிப்பு.. கண்ணீருடன் பிரஸ் மீட்டில் பேட்டி
டெல்லி: பிரிஜ் பூஷன் சிங்கிற்கு நெருக்கமானவராக அறியப்படும் சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் வீராங்கனைகள் ஈடுபட்டு இருந்தனர். கடந்த ஜனவரி மாதமே இந்த குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர்.

அப்போது விசாரணை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்ட போதிலும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பின்னரே பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த சம்மேளனம் தடை செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க பூபேந்தர் சிங் தலைமையில் கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது. இதன்பின்னர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான சஞ்சய் சிங், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளர் ஆவார். சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஷாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் இருந்து அதிரடியாக விலகுவதாக அறிவித்தார். பேட்டியின் போதே கண்கலங்கிய ஷாக்ஷி மாலிக், தனது ஷூவையும் எடுத்து மைக்குகள் முன்பு வைத்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications